×

மாணவர்களின் நினைவு திறனை அதிகரிக்கும் இந்த பழத்தை எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

 

ஒவ்வொரு வாழைப்பழத்திலும் ஒவ்வொரு சத்து அடங்கியுள்ளது .அதிலும் நேந்தர பழத்தில் பல்வகையான சத்துக்கள் அடங்கியுள்ளது .கேரள மாநிலம் மற்றும் கன்னியா குமாரி மக்களிடையே பிரபலமான இந்த பழம் உடல் குண்டாக விரும்பு வோருக்கும்,உடல் சோர்வு உடையோருக்கும் உடனடியாக எனெர்ஜி கொடுக்கும் பழமாகும் . காச நோய் உள்ளவர்கள் இந்த பழத்துடன் முட்டையை சேர்த்து சாப்பிட்டால் போதும் அந்த நோய் மெல்ல மெல்ல குறைந்து விடும் ,மேலும் அல்சர் உள்ளவர்கள் தினமும் இதில் ஒரு பழத்தை சாப்ப்பிட்டு வந்தால் வயிற்று புண் கூடிய விரைவில் ஆறி விடும் .தினமும் காலை டிபன் சாப்பிட்டு விட்டு இந்த பழத்தில் ஒன்றை சாப்பிட்டால் இதில் உள்ள பொட்டாசியம் சத்து இதய நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது .இந்தப்பழம் உடல் சருமத்திற்கும் நல்லது ,மேலும் மலசிக்கலைக்கூட குணப்படுத்த கூடியது,நரம்பு தளர்ச்சியை குணப்படுத்த கூடிய இந்த பழத்தை கேரள மக்கள் கஞ்சியாக வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களுக்கு தெம்பு கொடுப்பார்கள் 

1.  நன்கு கனிந்த நேந்திரம் பழத்தை சிறு துண்டுகளாக்கி இட்லி வேகவைப்பது போல வேகவைத்து அதனுடன் நெய் கலந்து 40 நாட்களுக்கு காலை உணவாக கொடுத்து வந்தால்  உடல் நல்ல புஷ்டியாக மாறும்.

2.நேந்திரம் பழம் மூளையை சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவுகிறது. தொடர்ந்து நேந்திரம் பழம் சாப்பிட்டு வந்தால் மூளையின் செல்கள் பலமடைந்து நினைவாற்றல் பெருகும். குறிப்பாக படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து நேந்திரம் பழம் சாப்பிட்டு வந்தால் அவர்களுடைய நினைவு திறன் அதிகரித்து மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும்.

3.  இது  இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது