×

கழுத்து வலியா ? அலட்சியம் காட்ட வேண்டாம்!

தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், அதிக நேரம் கணினியில் வேலை செய்பவர்களுக்கு முதுகு வலி நிச்சயம். அதுபோல முதுகுவலியை கவனிக்காதவர்கள் என்றால் கழுத்துவலி லட்சியம் என்கின்றனர் மருத்துவர்கள். முதுகுவலிக்கு ’பெயின்பாம்’ மட்டும் எடுத்துக் கொண்டு, முறையான கவனிப்பில் இல்லாதவர்களுக்கு கழுத்து வலி உண்டாகும் என்கின்றனர். கழுத்து வலி வந்தால் முதுகு தண்டுவட பாதிப்பு வரை ஏற்படும் என எச்சரிக்கை செய்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது பலரும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள், காலையில் அமர்ந்தால், மாலை வரை
 

தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், அதிக நேரம் கணினியில் வேலை செய்பவர்களுக்கு முதுகு வலி நிச்சயம். அதுபோல முதுகுவலியை கவனிக்காதவர்கள் என்றால் கழுத்துவலி லட்சியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

முதுகுவலிக்கு ’பெயின்பாம்’ மட்டும் எடுத்துக் கொண்டு, முறையான கவனிப்பில் இல்லாதவர்களுக்கு கழுத்து வலி உண்டாகும் என்கின்றனர். கழுத்து வலி வந்தால் முதுகு தண்டுவட பாதிப்பு வரை ஏற்படும் என எச்சரிக்கை செய்கிறார்கள் மருத்துவர்கள்.

தற்போது பலரும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள், காலையில் அமர்ந்தால், மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது மிகுந்த உடல் சோர்வை உண்டாக்கும். அதே நேரம் லேப்டாப்பை சரியான பொசிஷனில் வைத்துக் கொள்ளவில்லை என்றால், கழுத்து வலி வரும். கழுத்து தசைகள் சோர்வுற்று, கழுத்து எலும்பில் உள்ள ‘செர்வைகல் டிஸ்க்’என சொல்கிற சவ்வு விலகல் ஏற்பட்டு இந்த வலிகள் உருவாகும்.

கழுத்தில் 7 எலும்புகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் இடையில இணைப்புகளும், சவ்வுகளும் உள்ளன. கழுத்துக்கு அதிக வேலை கொடுத்தால் இந்த நரம்புகள் தேய்மானம் அடைய வாய்ப்புகள் உள்ளன.
இரவில் அதிக நேரம் கண்விழித்து வேலை செய்பவர்கள், படுத்துக் கொண்டே லேப்டாப்பில் வேலை செய்பவர்களுக்கு இந்த பிரச்சினைகளை ஏற்படும்.

கழுத்தில் வலி ஏற்பட்டால், மொத்த உடல் பாகங்களும் சோர்வுற்றதுபோல இருக்கும். எந்த பொருளையும் தூக்கக் கூட முடியாது. அடுத்தவர்களின் உதவியை நாடவேண்டிய நிலை வரும். பாதங்களில் உணர்ச்சி குறைவு, சிறுநீர் கழிப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என எச்சரிக்கை செய்கிறார்கள் மருத்துவர்கள்.

32314503 – view of a young attractive man got a back pain at the office

எனவே, கழுத்து வலி வந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சுளுக்காக இருக்கும் என நினைத்து அலட்சியம் காட்டக் கூடாது. 5 நாட்களுக்கு மேல் வலி தொடர்ந்தால் மருத்துவரை பார்த்துவிட வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.