×

வாய்ப்புண் பிரச்னைக்கு வீட்டில் இருக்கு எளிய தீர்வு!

நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் வாய்ப்புண் பிரச்னை ஏற்பட்டிருக்கும். வாய்ப்புண் என்றாலே வாயில் எதைச் சாப்பிட்டாலும் அதன் மீது பட்டு ஏற்பட்ட வலிதான் நம் நினைவுக்கு வரும். மிகவும் வலி, அசௌகரியம் போன்றவை காரணமாக என்றென்றைக்கும் அதை நம்மால் மறக்க முடியாது. மீண்டும் அப்படி ஒரு வேதனை வந்துவிடக் கூடாது என்று கருதுவோம். வாய்ப்புண் அடிக்கடி ஏற்பட ஊட்டச்சத்துக் குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது. வைட்டமின் டி பற்றாக்குறை, பி12, துத்தநாகம், இரும்புச் சத்து பற்றாக்குறை
 

நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் வாய்ப்புண் பிரச்னை ஏற்பட்டிருக்கும். வாய்ப்புண் என்றாலே வாயில் எதைச் சாப்பிட்டாலும் அதன் மீது பட்டு ஏற்பட்ட வலிதான் நம் நினைவுக்கு வரும். மிகவும் வலி, அசௌகரியம் போன்றவை காரணமாக என்றென்றைக்கும் அதை நம்மால் மறக்க முடியாது. மீண்டும் அப்படி ஒரு வேதனை வந்துவிடக் கூடாது என்று கருதுவோம்.

வாய்ப்புண் அடிக்கடி ஏற்பட ஊட்டச்சத்துக் குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது. வைட்டமின் டி பற்றாக்குறை, பி12, துத்தநாகம், இரும்புச் சத்து பற்றாக்குறை இருக்கும்போது வாய்ப்புண் ஏற்படலாம்.

சில உணவுகள் கூட வாய்ப்புண் ஏற்படக் காரணமாக இருக்கும். எலுமிச்சை போன்ற அதிக புளிப்புள்ள உணவு, அதிக காரணம், அன்னாசிப் பழம் போன்றவை வாயில் புண்ணை ஏற்படுத்திவிடலாம்.

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை தொற்று காரணமாகவும், வாயை சுத்தமாக பராமரிக்காமல் விடுவதாலும் வாய்ப்புண் ஏற்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

புண் எந்த இடத்தில் ஏற்படுகிறது என்பதைப் பொருத்து அது ஆறும் நாட்கள் மாறுபடும். உணவு, தண்ணீர் அடிக்கடி படும் இடத்தில் புண் ஏற்பட்டால் அது சரியாக ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை ஆகலாம்.

போதுமான ஊட்டச்சத்து உணவு எடுப்பது, மணத்தக்காளி கீரையை அடிக்கடி சேர்த்துக்கொள்வது போன்றவற்றின் மூலம் வாய்ப்புண் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம். வாய்ப்புண் வந்தவர்கள் அதை எப்படி சரி படுத்துவது என்று பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய்யை வாய்ப்புண் மீது தடவி வரலாம். அதில் உள்ள நுண்ணுயிர்க்கொள்ளும் திறன் மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் திறன் புண்களை விரைவாக குணமாக்கும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பருத்து துணியால் புண் உள்ள பகுதியை சுத்தம் செய்து, அதன் மீது பருத்தி பஞ்சில் தேங்காய் எண்ணெய்யை நனைத்துத் தடவ வேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டால் புண் விரைவில் குணமாகும்.

வாய்ப்புண் வந்தால் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு போட்டு கலக்கி, வாயில் ஊற்றிக் கொப்பளிக்க வேண்டும். உப்புநீர் உள்ளே ஊடுருவி காயம் ஆறுவரை விரைவுபடுத்துகிறது. இப்படிச் செய்யும்போது வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாவும் அழித்து வெளியேற்றப்படுகிறது. அதுவும் புண் ஆறுவதை விரைவுபடுத்துகிறது.

புண்ணின் மீது உப்பு சேர்க்காத வெண்ணெய் அல்லது நெய் தடவலாம். அதுவும் காயத்தின் மீது ஒரு படலத்தை ஏற்படுத்தி புண் ஆறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

புண் மீது தேன் தடவலாம். தேனின் ஆன்டி பாக்டீரியல் மற்றும் வீக்கத்தைத் தடுக்கும் தன்மை புண்கள் மீது விரைவாக செயல்படும். தினமும் 4-5 தடவை புண்கள் மீது தேன் தடவி வர வேண்டும். தேன் வாய்ப் புண் பகுதியில் உள்ள கிருமிகளை அழித்து, காயத்தைக் குணமாக்கும்.