×

இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்போரின் நகம் எப்படி இருக்கும் தெரியுமா ?

 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் -என்று சொல்வார்கள் ,ஆனால் மருத்துவத்தில் நோயின் அறிகுறி நகத்தில் தெரியும் என்று கூறலாம் ,அந்தளவுக்கு மனிதனுக்கு உண்டாகும் நோயின் அறிகுறிகளை நகம் காட்டி கொடுக்கும் .ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு அறிகுறி தென்படும் .உதாரணமாக நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..மேலும் நகத்தில் தெரியும் நோயின் அறிகுறிகளை பற்றி பார்க்கலாம்

1.சிலரின் நகம் திடீரென மஞ்சளாக காணப்படும் .மஞ்சள் காமாலையால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

2.சிலரின் நகம் திடீரென இலஞ் சிவப்பாக மாறும் இதய நோயால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

3.சிலரின் நகம் திடீரென ப்ளூ கலராக மாறும் .இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.

4.சிலரின் நகம் திடீரென வளைந்து காணப்படும் .நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிச்சொண்டு போல வளைந்து இருக்கும்.

5.சிலரின் நகம் திடீரென வெளுத்து போயிருக்கும் .இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.

6.சிலரின் நகம் திடீரென வெண்திட்டுக்கள் உண்டாகும் .சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.

7.சிலரின் நகத்தில்  திடீரென கோடுகள் காணப்படும் .மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளதாக காட்டும். மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி