×

இந்த பழத்தின் அருமை தெரியாதவங்கதான் ,சர்க்கரை நோய்க்கு ஆங்கில மாத்திரையோடு அலைவாங்க 

 

நாவல் பழத்தின் நன்மைகளை பற்றி ஒரு நாவலே எழுதலாம் .அந்த பழத்துக்குள் மனித உடலுக்கு அவ்ளோ ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .அதனால்தானோ என்னவோ விநாயகர் சதுர்த்திக்கு அந்த நாவல் பழத்தை வைத்து விநாயகருக்கு பூஜை செய்கிறோம் 

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பழங்களை அளவோடு உட்கொள்ள வேண்டும் .ஆனால் மற்ற பழங்களைப் போலல்லாமல், இந்த நாவல் பழத்தை அவர்கள் எவ்ளோ வேண்டுமானாலும் சாப்பிடலாம் .ஏனெனில் அவர்கள் உடலுக்கு இதில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது 

மலிவாக சாலையில் கொட்டி கிடக்கும் இந்த நாவல் பழ விதைகளில் ஜம்போலானா எனப்படும் நீரிழிவு எதிர்ப்பு மூலப்பொருள் உள்ளது. இந்த ஜம்போலனா  இரத்த ஓட்டத்தில் சர்க்கரை வெளியிடும் விகிதத்தைக் குறைக்க உதவி புரிந்து சுகர் பேஷண்டுகளுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கிறது .
 
அதாஉ மட்டுமல்லாமல் நாவல் பழ விதைகளிள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மையும் , மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் அடங்கியுள்ளதால் சித்த வைத்தியத்தில் இதை சுகர் பேஷண்டுகளுக்கு சிபாரிசு செய்கின்றனர் 
மேலும் நாவல் பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ,இதை ரெகுலராக சாப்பிடுவோருக்கு  ஹீமோகுளோபினை அதிகரிக்கும் என்று நிரூபணம் ஆகியுள்ளது