தோல் அரிப்பு போன்ற பிரச்சனைக்கு இந்த இலை போதுமே ...
பொதுவாக புதினா சளி, கப கோளாறுகளுக்கும் நல்ல மருந்தாகும். இது மணமூட்டியாக சமையலைக் கமகம ஆக்குகிறது, நாம் காய்கறி பிரியாணி செய்யும் போது ஒரு கைப்பிடி புதினாவும் சேர்த்து சமைத்தால் வாசனை ஊரைக் கூட்டும்.மேலும் இந்த புதினாவின் நன்மைகளை இந்த பதிவில் பாக்கலாம்
1.புதினா இலைகளில் ஏராளமாய் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது
2.இந்த புதினாவின் ஊட்ட சத்துக்கள் கிளென்சர், டோனர் மற்றும் மாய்ஸ்சரைசராகவும் பல வேலைகளை செய்கின்றது.
3..மேலும் சிலரின் சருமத்தில் எண்ணெய் சுரந்து காணப்படும் .இப்படி எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தும் தன்மை புதினாவுக்கு உண்டு.
4.இப்படி எண்ணெய் சுரப்பை கட்டு படுவதால் முகப்பருக்கள் ஏதும் இல்லாமல் ஜொலிஜொலிக்கலாம்.
5.மேலும் சிலருக்கு தோல் அரிப்பு போன்ற பிரச்சனை இருக்கும் .இப்படி இருப்பவர்கள் புதினா இலைச்சாற்றை பயன்படுத்தினால் பலனை பெறலாம்.
6.மேலும் புதினா சாறு சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து மிருதுவாக்கும்
7.அது மட்டுமல்லாமல் புதினா இலைகள், உங்கள் தேகத்தை பட்டுப்போன்று மிருதுவாக பராமரிக்கும்