×

இந்த உணவில் உள்ள மெலடோனின் போன்ற பொருட்கள் நல்ல தூக்கம் வர உதவும்

 

பொதுவாக நம் உடலுக்கு பால் மற்றும் பழ சாறுகள் நன்மை தரும் ,அந்த வகையில் நாம் இரவிலோ அல்லது பகலிலோ பால் குடிப்பதால் அதில் உள்ள விட்டமின்கள் மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
1.பால் குடிப்பதால் ஆரோக்கியம் மேம்படும் .முதலில் இரவில் பால் குடிப்பதால் நல்ல தூக்கம் வரும் . . 
2.பாலில் உள்ள ட்ரிப்டோபேன் மற்றும் மெலடோனின் போன்ற பொருட்கள் நல்ல தூக்கம் வர உதவும்.
3.பாலில் புரோட்டீன் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. 
4.இந்த புரோட்டீன் மற்றும் அமினோ அமிலங்கள் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் 
5.பாலில் புரோட்டீன் அதிகமாக உள்ளதால் பசி எடுப்பது குறைந்து உடல் எடை கூடாமல் காக்கும் . 
6.இது ஒரு மெட்டபாலிச ஊக்கியாக காணப்படுவதால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும்.
7.பாலில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி மற்றும் புரோட்டீன் போன்ற சத்துக்கள் நிரம்பி காணப்படுகிறது . மேற்கூறிய சத்துக்கள்  எலும்புகளின் வலிமைக்கு உத்திரவாதம் தரும்  
8.பால் குடிப்பதால் வயதாகும் போது ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு அபாயத்தை குறைக்கும்
9. இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் சூடான பாலைக் குடித்தால், அதில் உள்ள குறிப்பிட்ட அமினோ அமிலம் மன அழுத்தம் ஏற்ப்படாமல் காக்கும்