×

ஞாபக மறதியை உண்டாக்கும் இந்த உணவுகளை மறந்தும் தொடாதிங்க சார்

 

 மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், டிரான்ஸ் கொழுப்புகள், ஆரோக்கியமற்ற கார்ப்ஸ் மற்றும் ஆல்கஹால் ஆகிய உணவு வகைகளை அவசியம் தவிர்க்க வேண்டும் .ஏனெனில் இந்த உணவுகள் மன சோர்வை அதிகப்படுத்தி ,மன குழப்பம் முதல் ஞாபக மறதி வரை கொண்டு போய் விட்டு விடும் .எனவே உணவுக்கும் உணர்வுக்கும் தொடர்பு உண்டு என்று  பல வெளிநாட்டு ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது .பலர் ஸ்ட்ரெஸ்சாக இருக்கும்போது ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதாகவும் ,அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதகவும் அந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன

கீழே குறிப்பிட்ட  உணவுகளை அதிகம் உட்கொள்வதால்,  கவலை மற்றும் மனச்சோர்வு அதிகரிக்கலாம்.

மன அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க பேக் செய்யப்பட்ட பேஸ்ட்ரிகள், பிஸ்கட்கள் போன்றவற்றை ஒதுக்குங்கள் . மற்றும் ரொட்டிகளில் நிறைய சோடியம் காணப்படுகிறது, இது மன அழுத்தத்தை அதிகரிக்கும். இந்த உணவுகளை சாப்பிடுவதால் உங்கள் வயிற்றில் அஜீரண பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே, சோடியம் நிறைந்த பொருட்களை உட்கொள்வதைத் தவிர்த்து வந்தால் ஸ்ட்ரெஸ் ஆகாமல் தவிர்த்து விடலாம் .

. அடுத்து பலபேர் மனா சோர்வு நேரத்தில் காபி டீ போன்ற பானங்களை குடிப்பார்கள் .காஃபின் உள்ள பொருட்களை உட்கொள்வதன் மூலம் மனச்சோர்வும் அதிகரிக்கும். எனவே, நீங்கள் மனச்சோர்வு பிரச்சனையுடன் போராடுகிறீர்கள் என்றால், நீங்கள் காஃபின் உள்ள பொருட்களிலிருந்து விலகி இருந்தால் அந்த மன சோர்விலிருந்து தப்பித்து விடலாம்

, நீங்கள் மனச்சோர்வு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மறந்தும் கூட மது அருந்தக்கூடாது, ஏனென்றால் அதை உட்கொள்வதன் மூலம் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். இதன் காரணமாக நீங்கள் கவலை மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாகிறீர்கள்.அதனால் அந்த மன சோர்வு நேரத்தில் மதுவை தவிர்த்து விட்டால் பல பிரச்சனைகளை தவிர்த்து விடலாம் என பல சைக்காலஜிஸ்டுகள் கூறுகின்றனர்