சிறுநீரக கல் பிரச்சனை எந்த காய் உண்டாக்கும் தெரியுமா ?
பொதுவாக காய்கறிகளில் சிலவகை காய் கறிகள் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும் .சிலருக்கு கத்தரிக்காய் அலர்ஜி கொடுக்கும் இன்னும் சிலருக்கு பாகற்காய் அலர்ஜி இருக்கும் .இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காய் அலர்ஜி இருக்கும் இந்த பதிவில் வெண்டைக்காய் மூலம் என்ன நன்மை தீமை என்று பார்க்கலாம்
1.பொதுவாக அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிட கூடாது
2.மேலும் கொக்கோ மற்றும் செம்பருத்தி பூவிற்கு அலர்ஜி இருப்பவர்கள் வெண்டைக்காயை சாப்பிட வேண்டாம்.
3.மேலும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் கூட வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நலம் .
4.சிலருக்கு சிறுநீரக கல் சார்ந்த பிரச்சனை இருக்கும் .இந்த பிரச்சினை உள்ளவர்களும், ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும் வெண்டைக்காயை தவிர்ப்பது நலம் சேர்க்கும்
5.மேலும் சிலருக்கு இரைப்பை குடல் சார்ந்த பிரச்சனை,இருக்கும் அவர்களும் வாயு வீக்கம், வயிற்றுப்போக்கு இருப்பவர்கள் வெண்டைக்காய் சாப்பிடாமல் இருப்பது நலம் .
6.சிலருக்கு சர்க்கரை நோய் இருக்கும் இந்த பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காயை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
7.மேலும் நோயாளிகளுக்கு வெண்டைக்காய் சமைக்கும் முன்பு குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
8.சிலருக்கு இரத்தம் உறைதல் பிரச்சனை இருக்கும் இந்த பிரச்சினை உள்ளவர்களும், அதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களும் மருத்துவரின் ஆலோசனைப்படி வெண்டைக்காய் சாப்பிட வேண்டும்.
9. வெண்டைக்காயில் இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் k நிறைந்துள்ளது .