×

எங்க குடும்பத்துல  இப்ப  யாருமே ஹாஸ்ப்பிட்டலுக்கு போறதேயில்லை ,இதுக்கு  காரணமான கருஞ்சீரக பார்முலாவை சொல்றேன் படிங்க

 

கருஞ்சீரகத்தை நம் உணவில் சேர்த்து வந்தால் அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலை வராது இதற்கு முக்கிய காரணம் இதிலுள்ள தைமோகுவினோன் என்ற வேதிப்பொருள் இந்த வேதிப்பொருள் கருஞ்சீரகதில் மட்டுமே நிறைந்திருக்கிறது.

இந்த பொடிய 4 கிராம் எடுத்து நீராகாரத்தோட 3ல இருந்து 7 நாள்வரைக்கும் காலையிலயும் மாலையிலயும் சாப்பிட்டு வந்தா விஷப்பூச்சிகடியா இருந்தாலும், வேற நச்சு கடியா இருந்தாலும் நல்ல குணம் கிடைக்கும்
தலைவலி, மூட்டு வீக்கம்:
“கருஞ்சீரகத்த வெந்நீர் விட்டு அரைச்சு தலைவலிக்கும் மூட்டு வீக்கத்துக்கும் மேல்பூச்சா பூசி வந்தா சரியாகும்.

கரப்பான், சிரங்கு:
இந்த பொடிய காடி (நீராகாரம்) விட்டு அரைச்சு படை இருக்குற இடத்துல பூசலாம். அதோட, கரப்பான், சிரங்கு மாதிரி பிரச்சன இருக்குறவங்களுக்கு நல்லெண்ணெயில கருஞ்சீரக பொடிய சேத்து குழச்சு பூச குணமாகும். பசுவோட கோமியம் விட்டு அரைச்சு வீக்கம் உள்ள இடத்துல பூசுனா வீக்கம் குறையும்.

குழந்தைப் பேறுக்கு பிறகு வரும் வலி:
இந்த பொடிய தேன் விட்டு அரைச்சு பூச, குழந்தை பேறுக்கு பிறகு பெண்களுக்கு வர்ற வலி குணமாகும். கருஞ்சீரகப் பொடிய 1 கிராம் எடுத்து தேன் கூட சேத்தோ இல்லேன்னா நீர் சேத்தோ கலந்து குடுத்தா மூச்சு முட்டல் பிரச்சன உள்ளவங்களுக்கு நல்லபலன் கிடைக்கும்.

 

 

கருஞ்சீரகம் வயிற்றுள் உள்ள வாயுத்தொல்லையை நீக்கும் தன்மை கொண்டது. மற்றும் இரைப்பை, ஈரலில் ஏற்படும் கிருமி தொற்றுக்களையும் போக்கும் தன்மை கொண்டது.

அடிக்கடி கருஞ்சீரகம் உணவில் சேர்க்கப்பட்டு வரும் போது இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது மற்றும் நுரையீரலில் உள்ள கழிவுகளை நீக்கவும் உதவுகிறது.

புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கருஞ்சீரகத்துக்கு உண்டு.

கருஞ்சீரகம் பொடி பயன்கள்

வயிற்றில் அல்சர் உள்ளவர்கள் கருஞ்சீரக பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் புண்கள் ஆறி விடும்.

குடல் புழுக்கள் உள்ளவர்கள் கருஞ்சீரக பொடியை வெண்ணீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் குடல் புழுக்கள் நீங்கி விடும்.

 

கருஞ்சீரக பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி மற்றும் வேப்பம் இல்லை பொடி மூன்றையும் கலந்து பயன்படுவதன் மூலம் தோலில் ஏற்படும் நோய்களை (தேமல்,சொறி,சிரங்கு) குணமாக்கலாம்.

கருஞ்சீரகம் உண்ணும் முறை

சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகதை வெண்ணீர் மற்றும் தேன் கலந்து காலை, மாலை குடித்து வரகற்கள் கரைந்து சிறுநீருடன் வெளியேறும்.

நாள்பட்ட இருமல் அல்லது சளி தொந்தரவு இருந்தால் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் அரை தேக்கரண்டி பூண்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை கரைக்கும் சக்தி கொண்டது.

50 கிராம் கருஞ்சீரகம், 250 கிராம் வெந்தயம், 100 கிராம் ஓமம் இந்த மூன்று பொடிகளையும் ஒன்றாக கலந்து எடுத்த பின் தினமும் ஒரு தேக்கரண்டி வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவில் உணவு உட்கொண்ட சிறிது நேரத்துக்கு பின்குடித்து வர வேண்டும்.

இதை குடித்த பின் எந்த உணவும் உண்ணக்கூடாது. தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்கழிவுகளும் அகன்று விடும். மற்றும் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை பெற முடியும்.

கருஞ்சீரகம் சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாகும் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரோலின் அளவை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரோலை குறைத்து சக்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க கருஞ்சீரகம் உதவுகின்றது.