×

கெட்டக் கொழுப்பை குறைக்கும் ஆற்றல் கொண்டது இந்த ஜூஸ் ..

 

பொதுவாக பழ ஜூஸ்களை நாம் சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியம் தர கூடியது .அந்த வகையில் 
ஆப்பிள் ஜூஸில்  ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், இதயத்துக்கு வலுவினை தரக்கூடியது. மேலும் ஆப்பிள் ஜூஸ் கொழுப்புச் சத்தையும் குறைக்கும். ஆப்பிள், உடல் எடையைக் குறைக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி புற்றுநோய் உட்பட பல நோய்களைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.இது போல் மற்ற பல்வேறு பழ ஜூஸ்களில் என்ன நன்மையுள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.பொதுவாக அன்னாசி பழத்தில்  வைட்டமின் பி மற்றும் சி இருப்பதால் நம் செரிமான மண்டலம் சீராக இயங்க இந்த பழ ஜூஸ் உதவுகிறது  
2.அன்னாசி பழ ஜூஸ் ரத்தக் குறைபாடு, தொண்டைப் புண், இருமல் போன்றவற்றையும் குணமாக்கும் சிறந்த மருந்து. 
3.அன்னாசி பழ ஜூஸ் கெட்டக் கொழுப்பை குறைக்கும் ஆற்றல் கொண்டது .
4.அன்னாசி பழ ஜூஸ் தொண்டையில் தொற்று, இருமல், தொப்பை இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட பலன்கள் கிடைக்கும்.
5.அடுத்து ஆரஞ்சு ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறந்த பழ சாறு ஆகும்  
6.எனவே,ஆரஞ்சு ஜூஸ் நம்மைச் சுறு சுறுப்பாக வைத்திருக்கும். அல்சரை குணப்படுத்தும்..
7.எலும்பு தொடர்பான பிரச்னை இருப்பவர்கள், அல்சர் நோயாளிகள், நரம்பு தொடர்பான பிரச்னை இருப்பவர் களுக்கு ஆரஞ்சு ஜூஸ் ஏற்றது.
8.அடுத்து ஆப்பிள் ஜூஸைத் தொடர்ந்து குடித்து வரத் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும். 
9.அதோடு முடி உதிர்தல், பொடுகுத் தொந்தரவு போன்றவற்றுக்கு ஆப்பிள் ஜூஸ் நிரந்தர தீர்வு தரும். 
10.ஆப்பிள் ஜூஸில்  உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. 
11.எனவே சர்க்கரை நோயாளிகள் இந்த ஆப்பிள் ஜூஸை  சாப்பிடுவது நல்லது