இரும்பு சத்துக்கு இவ்ளோ உணவுகள் இருக்கும்போது பக்கவிளைவுகள் தரும் வைட்டமின் மாத்திரை எதுக்கு?
டீன்ஏஜ் பருவத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் வயதுக்கு வந்த பெண்களுக்கு மாதவிடாய் இரத்த போக்கு இருப்பதால் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அவர்கள் தவறாது எடுத்து வர வேண்டும். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் ஆரோக்கியமான உணவிற்கு பதிலாக பாஸ்தா, பீட்சா போன்ற குப்பை உணவுகளையே உண்டு வருகின்றனர்.
இரும்பு என்பது ஒரு கனிமமாகும். இது சத்தமாக நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது. குறிப்பாக டீனேஜ் வயதில் இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் இரத்த சோகை போன்ற நோய்க்கு உள்ளாகின்றனர். எனவே டீனேஜ் வயதினருக்கு இரும்புச்சத்து எவ்வளவு முக்கியம் என்பதையும் இரும்புச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை பற்றியும் நாம் அறிந்து கொள்வோம்.
இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் :
இரும்பு சத்து அதிகரிக்க அல்லது குறைபாட்டைத் தடுக்க, பலவிதமான இரும்புச்சத்து நிறைந்துள்ள சமச்சீரான உணவில் கவனம் செலுத்துவது முக்கியம்.
விலங்கு உணவுகள் (ஹீம் இரும்பு) மற்றும் தாவர உணவுகள் (ஹீம் அல்லாத இரும்பு) ஆகிய இரண்டிலிருந்தும் இரும்பு பெறப்படுகிறது.
தாவர அடிப்படையிலான அல்லது ஹீம் அல்லாத இரும்பு உணவுகளை விட விலங்குகள் அல்லது ஹீம் இரும்பு மூலங்கள் உடலால் சிறப்பாக உறிஞ்சப் படுகின்றன.
உடல் தாவர உணவுகளை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு இரும்புச்சத்தை விலங்கு உணவுகளிலிருந்து உறிஞ்சுகிறது.
தாவர இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை வைட்டமின் சி நிறைந்த உணவுகளுடன் சேர்த்து உண்ணும் போது இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்க உதவும்
100 கிராம் கீரையில் 4 மில்லிகிராம் இரும்பு சத்து உள்ளது.
இரும்பு சத்து அதிகம் உள்ள காய்கறிகள் வரிசையில் ப்ரோக்கோலி முதலிடத்தில் உள்ளது. 100 கிராம் ப்ரோக்கோலியில் 2.7 மில்லிகிராம் இரும்புச் சத்து உள்ளது.
100 கிராம் பீட்ரூட்டில் 0.8 மில்லிகிராம் இரும்புச் சத்து உள்ளது.
ஒரு பெரிய உருளைக்கிழங்கில் 3.2 மில்லிகிராம் இரும்புசத்து உள்ளது.
இரும்பு சத்து அதிகம் உள்ள பழங்கள் வரிசையில் ஒரு கப் தர்பூசணியில் 0.4 மில்லிகிராம் இரும்புச் சத்து உள்ளது.
ஒரு நடுத்தர ஆப்பிள் 0.31 மில்லிகிராம் இரும்பு சத்தை கொண்டுள்ளது.
100 கிராம் மாதுளையில் 0.3 மில்லிகிராம் இரும்பு சத்து உள்ளது.
100 கிராம் சிவப்பு இறைச்சியில் 0.4 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது.
100 கிராம் கோழி இறைச்சியில் 0.7 மில்லிகிராம் இரும்புச்சசத்து உள்ளது.
100 கிராம் கோழி கல்லீரலில் 9 மில்லிகிராம் இரும்பு இரும்புச்சத்து உள்ளது.
100 கிராம் இறாலில் 3 மில்லிகிராம் இரும்புச் சத்து உள்ளது.
100 கிராம் சால்மன் மீனில் 1.7 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது.
100 கிராம் மத்தி மீனில் 28 மில்லிகிராம் இரும்புச் சத்து உள்ளது.
100 கிராம் சோயாபீன்ஸில் 15.7 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது.
100 கிராம் சிவப்பு அரிசியில் 0.4 மில்லிகிராம் இரும்புச் சத்து உள்ளது.
எந்த முழு தானியத்திலும் 100 கிராமுக்கு 2.5 மில்லிகிராம் இரும்புச் சத்து உள்ளது.