×

இந்தியர்களுக்கு ஆயுசு ‘கெட்டி’ – 70 வயது வரை வாழலாம்

இந்தியர்களின் ஆயுட்காலம் கடந்த 20 ஆண்டுகளில் 11 வயது அதிகரித்திருக்கிறது.மத்திய அரசின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் இந்தியர்களின் ஆயுள் காலம் குறித்த ஆய்வைச் செய்துள்ளது. அதன் முடிவை “லான்செட்” இதழ் வெளியிட்டுள்ளது. ஆய்வின் முடிவில், கடந்த 2019 கணக்குப்படி இந்தியர்கள் 70.8 வயது வரை வாழலாம்.முன்னதாக 1990-ல் இந்தியர்களின் ஆயுட்கால வயது சராசரியாக 59.6- ஆக இருந்தது.நாட்டிலேயே அதிகபட்சமாக 77.3 வயது வரை வாழக்கூடிய அம்சம் கேரள மாநிலத்தவர்களிடம் இருக்கிறதாம். மிகக் குறைந்த பட்சமாக
 


இந்தியர்களின் ஆயுட்காலம் கடந்த 20 ஆண்டுகளில் 11 வயது அதிகரித்திருக்கிறது.மத்திய அரசின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் இந்தியர்களின் ஆயுள் காலம் குறித்த ஆய்வைச் செய்துள்ளது. அதன் முடிவை “லான்செட்” இதழ் வெளியிட்டுள்ளது.

ஆய்வின் முடிவில், கடந்த 2019 கணக்குப்படி இந்தியர்கள் 70.8 வயது வரை வாழலாம்.முன்னதாக 1990-ல் இந்தியர்களின் ஆயுட்கால வயது சராசரியாக 59.6- ஆக இருந்தது.
நாட்டிலேயே அதிகபட்சமாக 77.3 வயது வரை வாழக்கூடிய அம்சம் கேரள மாநிலத்தவர்களிடம் இருக்கிறதாம். மிகக் குறைந்த பட்சமாக 66.9 வயது வரை உத்தர பிரதேசத்துக்காரர்கள் வாழாலம் என ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.இதில் ஆண்களை விடவும் பெண்கள் கூடுதல் காலம் வாழ்வதாகவும் கண்டு பிடித்துள்ளனர்.


இந்த ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் இதய நோய் மற்றும் புற்று நோயால்தான் அதிக மரணங்கள் நிகழ்வதாக அறியப்பட்டுள்ளது. இது தவிர காற்று மாசுபாடு, உயர் ரத்த அழுத்தம், புகையிலைப் பயன்பாடு, மோசமான உணவுப் பழக்கம், சர்க்கரை நோய் ஆகியவை மரணத்தை ஏற்படுத்தும் முதல் 5 காரணிகளாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.