×

உதடு கருப்பா இருக்குன்னு வெறுப்பா இருக்கீங்களா? சிவப்பாக்க சில டிப்ஸ்

சிலருக்கு உதடுகள் கருமை நிறமாக இருக்கும் .இப்படி உதட்டில் உள்ள கருமை நீங்க சில சத்தான உணவுகளையும் ,சில வைத்தியமும் செய்ய வேண்டும் ,அவற்றை பார்க்கலாம். இந்த பிரச்சினையுள்ளவர்கள் தினந்தோறும் சாப்பிட வேண்டியவை :மாதுளை, திராட்சை விட்டமின் சி உள்ள சிட்ரஸ் பழங்கள், 2-3 லிட்டர் தண்ணீர், நீர் மோர், இளநீர், பசுநெய் கலந்த உணவுகள், கீரைகள் ,பழச்சாறுகள். கருமை நீக்கும் இயற்கை ஸ்கரப்: வாரத்துக்கு 3 நாள் லிப் ஸ்கரப் செய்வது நல்லது. வெள்ளை சர்க்கரையை
 

சிலருக்கு உதடுகள் கருமை நிறமாக இருக்கும் .இப்படி உதட்டில் உள்ள கருமை நீங்க சில சத்தான உணவுகளையும் ,சில வைத்தியமும் செய்ய வேண்டும் ,அவற்றை பார்க்கலாம்.

இந்த பிரச்சினையுள்ளவர்கள் தினந்தோறும் சாப்பிட  வேண்டியவை :மாதுளை, திராட்சை விட்டமின் சி உள்ள சிட்ரஸ் பழங்கள், 2-3 லிட்டர் தண்ணீர், நீர் மோர், இளநீர், பசுநெய் கலந்த உணவுகள், கீரைகள் ,பழச்சாறுகள்.

கருமை நீக்கும் இயற்கை ஸ்கரப்:

வாரத்துக்கு 3 நாள் லிப் ஸ்கரப் செய்வது நல்லது. வெள்ளை சர்க்கரையை லேசாக பொடித்துக் கொள்ளுங்கள். அதாவது சர்க்கரை துகள்கள் இருக்க வேண்டும். அதுபோல. இதனுடன் காபி தூள் சேர்க்கவும். இதை உதட்டில் தடவி குறைந்தது 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். . பின்னர் கழுவி விட்டு தேங்காய் எண்ணெய் தடவலாம். இட்லி மாவு, தோசை மாவு தடவியும் ஸ்கரப் செய்யலாம். புளிச்ச கீரை சாறு, எலுமிச்சை சாறு,சர்க்கரை ஆகியவற்றை கலந்தும்  ஸ்கரப் செய்யலாம்.

எண்ணெய் வைத்தியம்

நெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய். இவை அனைத்தும் உதட்டுக்கு நல்லது. பகலிலும்  இரவிலும்  இதை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை வைத்தியம்

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, உதட்டில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல்

இரவில் கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவலாம். அடுத்த நாள் கழுவி விடுங்கள். தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்