×

இந்த உணவுகளை தவிர்த்தால் ,இதய நோயால் தவிக்க வேணாம் .

 

 இந்தியாவில் 5 கோடியே 45 லட்சம் பேருக்கு இதய நோய் இருப்பதாகவும் , உயிரிழப்பவர்கள் நான்குபேரில் ஒருவரது மரணத்திற்கு இதயநோயே காரணமாயிருக்கிறது என்பது அச்சந்தரும் உண்மையாகும். அவ்வளவு ஆபத்தான இதய நோயிலிருந்து நம்மை பாதுகாக்க ,சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தால் இதயத்தை பாதுகாக்க முடியும்.

உங்கள் இதயத்திற்கு தீமை தரும் பேக்கரி உணவுகளில் அதிக அளவு சர்க்கரையும், ஊட்டச்சத்தே இல்லாத பூரித கொழுப்பும் (சாச்சுரேட்டட் ஃபேட்) உள்ளது. இவ்வுணவுகள் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து, இதய நோயை உங்கள் வீட்டுக்கு கொண்டு வருகிறது  .

உங்கள் இதயத்திற்கு தீமை தரும்  ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸை வெறுக்க முடியுமா? அனைவரும் விரும்பி தின்னும் பண்டம் இது. ஆனால் இந்த உருளைக்கிழங்க உங்கள் இதயத்திற்கு மூன்று மடங்கு ஆபத்தை கொண்டு வரும் இந்த உணவை ஒதுக்கி இதயத்தை பாதுகாப்போம் .

உங்கள் இதயத்திற்கு தீமை தரும் ஐஸ்கிரீம்: நல்ல ஆரோக்கியம் கொண்ட ஒருவர் ஒரு நாளைக்கு 300 மில்லி கிராமுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் சாப்பிடக்கூடாது. சில ஐஸ்கிரீம்களில் நாம் ஒருநாளைக்கு சாப்பிடக்கூடிய கொலஸ்ட்ராலின் அளவில் மூன்றில் ஒரு பங்கு உள்ளது. ஆகவே அதை ஒதுக்கி ஹார்ட்டை பாதுகாப்போம்

உங்கள் இதயத்திற்கு தீமை தரும் ஃப்ரைடு சிக்கன்: உடல் எடையை குறைப்பதற்கு கிரில்டு சிக்கன் ஏற்றது என்பதில் ஐயமில்லை. ஆனால், கோழியிறைச்சியை நன்கு பொரித்தால் அது ஆரோக்கியமான உணவு அல்ல. உங்கள் இதயத்திற்கு தீமை தரும் இந்த க்ரில் சிக்கனை தவிர்ப்போம்