×

"நாங்க உங்க இதயத்தின் நண்பன்" -என்று மார் தட்டும் உணவுகள் இவை

 

  பொதுவாக இதய நோய் வராமலிருக்க ஆரோக்கியமான உணவு பழக்கமும் ,உடற்பயிற்சியும் முக்கியம் .அடைப்பு ஏற்படாமல தடுக்கும், அடைப்பை நீக்கும்  சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

சிட்ரஸ் நிறைந்த ஜூசி பழங்கள்&பீட்ரூட்:

பொதுவாக இதய நோய் வராமலிருக்க காய் கறியையும் பழங்களையும் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் ,கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைக்க வேண்டும் .ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.  இவை அனைத்தும் சேர்ந்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது

பீட்ரூட் நைட்ரைட்டின் சிறந்த மூலமாகும். நைட்ரிக் ஆக்சைடு  இரத்த நாளங்களில் வீக்கத்தை தடுக்க மிகவும் முக்கியமானது. . இது இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே, இது இதய அடைப்பு அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது.எனவே இது போல உள்ள காய் பழத்தை ஒதுக்காமல் இருந்தால் இதய நோய் எட்டியே பார்க்காது

வாதுமை பருப்பு:&தக்காளி&பெர்ரி:

சில வகை பருப்புகள் இதய நோயை தடுக்கும் வல்லமை உள்ளது ,அதில் வாதுமை பருப்பு இதயம் மற்றும் மூளை இரண்டிற்கும் மிகவும் நன்மை பயக்கும் . இதில் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை உள்ளன. இது தவிர, ஒமேகா அமிலங்களும் அதிக அளவில் காணப்படுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு வாதுமை பருப்பு ஒரு சஞ்சீவியாக இருப்பதற்கு இதுவே காரணம்.தக்காளியும் இதய நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது

நம் நாட்டில் உள்ள பெர்ரிகளில் ஜாமூன் மற்றும் ஸ்ட்ராபெரி முக்கிய பெர்ரி ஆகும். பெர்ரி கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனை உட்கொள்வதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.மேற்கூறிய உணவுகள் உங்கள் இதயத்தின் நண்பன் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது .