×

கொரோனா நோயாளிகளில் பாதி பேருக்கு இதயம் பாதிக்கப்பட்டுள்ளதாம்! – அதிர்ச்சித் தகவல்

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்களில் பாதி பேருக்கு இதய பாதிப்பு வந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 2020ம் ஆண்டு உலகைப் புரட்டிப்போட்டது கொரோனா. கொரோனா மிகப்பெரிய உயிர்க்கொல்லியாக்கப் பார்க்கப்பட்டது. பிறகு முதியவர்களுக்கு மட்டுமே அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது தெரியவந்தது. இருப்பினும் அதன் நீண்ட நாள் பாதிப்பு என்னவாக இருக்கும் என்று புரியாமல் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் குழம்பிப்போயினர். கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு வரக்கூடிய பாதிப்புகள், பின்விளைவுகள் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா
 

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்களில் பாதி பேருக்கு இதய பாதிப்பு வந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

2020ம் ஆண்டு உலகைப் புரட்டிப்போட்டது கொரோனா. கொரோனா மிகப்பெரிய உயிர்க்கொல்லியாக்கப் பார்க்கப்பட்டது. பிறகு முதியவர்களுக்கு மட்டுமே அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது தெரியவந்தது. இருப்பினும் அதன் நீண்ட நாள் பாதிப்பு என்னவாக இருக்கும் என்று புரியாமல் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் குழம்பிப்போயினர்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு வரக்கூடிய பாதிப்புகள், பின்விளைவுகள் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நோயாளிகளில் பாதி பேருக்கு இதய செல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எம்.ஆர்.ஐ ஸ்கேனில் தெரியவந்துள்ளது என்று ஐரோப்பிய இதய மருத்துவர்களுக்கான மருத்துவ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் உள்ள மருத்துவமனையைச் சார்ந்த கொரோனா நோயாளிகளின் இதயத்தை எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆய்வுக்கு விஞ்ஞானிகள் உட்படுத்தினர். அவர்களுக்கு இதயத்தில் தசை வீக்கம் (மயோ கார்டைடிஸ்), வடு அல்லது திசுக்கள் இறப்பு (இன்ஃபராக்ஷன்), இதயத் திசுக்களுக்கு ரத்த விநியோகத்தில் பாதிப்பு (ஸ்கீமியா) ஆகியவை ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இவர்களின் ரத்தத்தில் எல்லாம் டிராஃபோனின் என்ற இதயத்தில் காணப்படும் புரதம் அளவு அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் இதய தசையில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு கோவிட் தொற்றுதான் காரணமாக இருக்கும் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்குப் பிறகு நோயாளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி ஆய்வுகள் நடந்ததாகவோ, பாதிப்பு எதுவும் கண்டறியப்பட்டதாகவோ தகவல் இல்லை. இருப்பினும் வெளிநாடுகளிலிருந்து வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. எனவே, கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் தங்கள் முழு உடலைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்!