பெண்கள் மீனை அதிக அளவில் சாப்பிடுவதால் எந்த நோய் தாக்காது தெரியுமா ?
பொதுவாக அசைவ உணவுகளில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியை விட மீனில் பல மருத்துவ குணம் அடங்கியுள்ளது ,இந்த மீன் உணவால் ஜப்பானியர்கள் நீண்ட ஆயுளுடன் உள்ளனர் ,இந்த மீன் உணவால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி இந்தப்பதிவில் பார்க்கலாம்
1. மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது.
2.மீன் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.
3.மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.
4.மீன் மூலம் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
5.மீன்களில் அடங்கியுள்ள அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பெரிதளவும் உதவுகின்றன.
6.பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் சாப்பிடுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம்..
7.பெண்கள் மீனை அதிக அளவில் சாப்பிடுவதால் எலும்புகள் பலமடைகிறது.
8.மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
9.மீனை அதிகம் சாப்பிடுபவர்கள் மன அழுத்தம் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம்..
10.தூக்கம் வராமல் கஷ்டபடுவோர் உணவில் அதிக அளவு மீன் சேர்த்துக் கொண்டால் நல்லத் தூக்கம் வரும்.