×

குறட்டை தொல்லையால் தூங்க முடியலையா ?இதை செய்யுங்க போதும் 

 

பொதுவாக அதிக தொப்பை இருப்போருக்கும் இந்த குறட்டை தொல்லை இருக்கும் .இந்த குறட்டை பிரச்சினை அவருக்கு அருகில் தூங்குவோருக்குத்தான் பிரச்சினை .ஒருவர் குறட்டை விடுவதால் பலருக்கு பிரச்சினை .இந்த குறட்டையை எப்படி தடுக்கலாம் என்று பார்க்கலாம் 

1.முதலில் நல்லெண்ணெய் 50 மில்லி எடுத்து எடுத்து கொள்ளவும் 
2.அந்த நல்லெண்ணெயுடன் ,தும்பை பூக்கள் சிலவற்றை சேர்த்து கொள்ளவும் 
கிட்டத்தட்ட 50 எண்ணிக்கை தும்பை பூவை நல்லெண்ணெயுடன் சேர்த்து கொள்ளவும் .
இந்த எண்ணெயுடன் சேர்ந்த தும்பை பூவை நன்கு கொதிக்க வைத்து கொள்ளவும் 
3.பின்னர் சூடு ஆறியதும் வடிகட்டி எடுத்து கொள்ளவும் 
இந்த கலவையை 21 நாளைக்கு மூக்கில் 3 சொட்டு விட்டு கொள்ளவும் 
இப்படி மூக்கில் இட்டு வர குறட்டை தொந்தரவு அடியோடு குணமாகும்.
4.அதுபோல் மூக்கிரட்டை செடியின் பொடியை 100 கிராம் எடுத்து எடுத்து கொள்ளவும் 
5.இந்த மூக்கிரட்டை செடியுடன் கூடவே 50 கிராம்
மிளகுத்தூள் சேர்த்து கொள்ளவும் .இதை நன்றாக
கலந்து வைத்து கொள்ளுங்கள்.
6.இந்த கலவையில்  கால் தேக்கரண்டி அளவுக்கு
எடுத்து ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து எடுத்து கொள்ளவும் 
7.இரவு உணவு உண்ட அரை மணி நேரம் தாண்டி இந்த கலவையை 
உண்டு வர கர்ணகடூரமாக குறட்டை விடுவதை நிறுத்தி சந்தோஷமாக
அருகில் இருப்பவர்களும் உறங்கலாம்.