×

ஏலக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா ?

 

ஏலக்காய் அளவில் சிறிதாக இருந்தாலும் இது நம்  உடலுக்கு ஏரளமான நன்மைகளை அள்ளி கொடுக்கிறது .இதை ஸ்வீட் மற்றும் பலகாரங்களில் சேர்ப்பது நம் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கத்தான் .அதனால் அந்த ஏலக்காய் மூலம் நாம் பெரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

அடிக்கடி வாந்தி எடுத்து வருவோர் ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் அந்த வாந்தி நிற்கும்.

வறட்டு இருமல் போன்ற தொலலையால் அவதி படுவோர் ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் உடனே அந்த தொல்லை சரியாகும்

தீராத தலை வலியால் அவதிப்படுவோர் ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு ஆகியவை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் சளி நீங்கும்

நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட அவஸ்தைப்படுபவர்களும் சளியால் இருமல் வந்து தொடர்ந்து  இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே தொடர் இருமல் குறையும்.

வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் அதை சரி செய்ய வாயில் ஏலக்காயை மென்றால் போதும்

சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.

ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும்.அதனால் ஏலக்காயை நம் உணவில் அடிக்கடி சேர்த்து அதன் பலனை முழுமையாக பெறலாம் .அதை உபயோகப்படுத்தி சிறியவர் முதல் பெரியவர் வரை பலன் பெறுங்கள்