×

பிராய்லர் கோழி சாப்பிடுவோரை பிடித்து கொள்ள காத்திருக்கும் நோய்கள் .

 

நம்மால் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் பிராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல தாக்கங்கள் நம் உடலில் உண்டாக காரணியாக திகழ்கிறது. மரபணு மற்றம், பல ஊசிகள் மூலம் கொழுப்பு சத்து நிறைந்தது தான் பிராய்லர் கோழி.


பிராய்லர் கோழி வளர்க்க 12 விதமான கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றனர். இவர் அவற்றின் உணவின் மூலம் சேர்க்கப்பட்டு அளிக்கப்படுவதால் அதை உண்ணும் மனிதர்களுக்கும் ஆரோக்கிய கேடு விளையும் என கூறுகின்றனர்.
பிராய்லர் கோழியை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை,  இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ஊசிகளின் மூலமாக பிராய்லர் கோழிகள்  தசை வளர்ச்சி ஏற்றப்படுவதால். இது ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழிக்கும் கருவியாக மாறுகிறது.

பிராய்லர் கோழி என்பது ஒரு ஆண்பால் பெண்பால் அற்ற உயிரினம். இதனை வளர்ப்பதற்கு பலவித வேதிப்பொருட்களை பயன் படுத்துகின்றனர்.மற்றும் இதன் வளர்ச்சி மிகவும் குறைந்த நாட்களில் முழுமை அடைகின்றது.

பிராய்லர் கோழியின் தீமைகள்

இப்போது நாம் இதனை உண்பதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளை பற்றி தெளிவாக காண்போம் உறவுகளே.

1. உடல் பருமன்

பிராய்லர் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளது.இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும். எனவே பிராய்லர் கோழியை அறவே தவிர்த்திடுங்கள்.

2. புற்று நோய் ஏற்பட வழி வகுக்கும்

பிராய்லர் சிக்கனை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதாக பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்க்கு முக்கிய கரணம் தந்தூரி சிக்கன் மற்றும் கிரில் சிக்கன் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பது.

எனவே தந்தூரி மற்றும் கிரில் சிக்கனை அடிக்கடி உண்பதை தவிர்த்திடுங்கள்.

3. ஆண்களின் மலட்டு தன்மை

தற்பொழுது மிகவும் பொதுவாக உள்ள பிரச்சினை ஆண்களின் மலட்டு தன்மை ஆகும். இதற்க்கு முக்கிய காரணம் அடிக்கடி பிராய்லர் கோழியினை உண்பது ஆகும். இதை வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் ஹர்மோன்கள் ஆண்களின் இனப்பெருக்க சக்தியினை பாதிக்கின்றது.

4. பறவை காய்ச்சல்

தற்பொழுது பரவலாக ஏற்படும் பறவை காய்ச்சல் முக்கியமாக பிராய்லர் கோழியின் மூலமாக தான் பரவுகின்றது. எனவே இதனை உண்ணும்பொழுது பார்த்து உன்ன வேண்டும் நண்பர்களே.

5. தேவையற்ற ஆண்டிபயாடிக் உடலில் சேரும்

பிராய்லர் சிக்கனை தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் அதிக அளவில் ஆண்டிபயாடிக் சேரும். இதற்க்கு கரணம் அவை வளரும் பொழுது அவற்றின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படுகின்ற ஆண்டிபயாடிக் ஒரு முக்கிய கரணம் ஆகும்.

6. விரைவில் பூப்படைய செய்யும்

பிராய்லர் சிக்கனின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படும் கெமிக்கல் பெண்களை விரைவில் வயதடைய செய்யும். முக்கியமாக இதில் சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன் பெண்களை 12 வயதிற்குள் பூப்படைய செய்கின்றது.

7. பாக்டீரியாக்கள்

பிராய்லர் கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.இதனை சரியாக சமைக்காமல் உண்டால் நமது உடலில் பாக்டீரியாக்கள் சேரும். எனவே இதனை அறவே தவிர்த்திடுங்கள்.

பிராய்லர் சிக்கனுக்கு பதிலாக நீங்கள் நாட்டுக்கோழி, மாட்டிறைச்சி, மீன்,ஆட்டிறைச்சி மற்றும் மீனினை உட்கொண்டு வாருங்கள். இப்படி உண்டு வந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்