×

தண்ணீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டால் எந்தெந்த நோயெல்லாம் கட்டுப்படும் தெரியுமா?

 

பொதுவாக  பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடாமல் தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைத்த பின் சாப்பிட்டால் இன்னும் சிறப்பு .அதன் பலன்களை தெரிந்து கொண்டால் போதும் ,நீங்கள் இனி பாதாமை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவீர்கள் .அதன் பலன்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம்
1.சிலருக்கு செரிமான பிரச்சினை இருக்கும் .தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பருப்பினை சாப்பிட்டால் இதிலுள்ள லிபேஸ் என்ற நொதி நாம் சாப்பிட்ட உணவை  எளிதில் செரிக்க வைக்கின்றது
2. சிலருக்கு கட்டுக்கடங்காத சுகர் இருக்கும் .ஊற வைத்த பாதாமால் இரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்படும். நமது இரத்தத்தில் ஆல்ஃபா டேகோபெரோல் என்கிற பொருள் அதிகரிக்கிறது.
3.சிலர் உடல் எடை குறைக்க கஷ்ட படுவதுண்டு பாதாமில் கொழுப்பு காணப்படுவதால் இது எளிதில் வயிற்றை நிரப்பி விடும்.வயிறு நிரம்புவதால் வேறு ஒன்றும் சாப்பிட முடியாது. இதனால் உடல் எடை குறையும்.
4.சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாய் இருக்கும் .தண்ணீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும், சர்க்கரை அளவும் கட்டுப்படும்.
5.கர்ப்பிணி பெண்கள் இந்த பாதாமை  அதிகம் எடுத்துக்கலாம். கர்ப்பிணி பெண்களுக்கு இதில் உள்ள ஃபோலிக் அமிலம் குழந்தை ஆரோக்கியமாக வளர உதவுகிறது.