கண்ட காப்பி குடிப்பதை விட சுக்கு காபி குடிப்போருக்கு உடலில் நேரும் மாற்றம்
பொதுவாக இஞ்சி காய்ந்தால் அதை சுக்கு என்று அழைப்போம் .இந்த சுக்கு நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது .இந்த சுக்கை காபி போட்டு குடிப்பதால் நம் உடல் நலம் பெறுகிறது
சுக்கு காபி என்பது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு பாரம்பரிய பானமாகும்.
பழங்கால வீட்டு வைத்திய முறைகளின் ஒரு பகுதியாக இது இருகின்றது. இதன் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு சளி தொல்லை இருக்கும் .இதற்கு தீர்வாக சுக்கு காபி சளியைக் குறைக்கவும், செரிமான பிரச்சனைகள் மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.
2.குறிப்பாக மழைக்காலங்களில் இதை குடித்தால் காபின் இல்லாத பானமாகும்.
3.உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் சுக்கு காபி எடுத்துக்கொள்வது நல்லது.
4.ஆகவே ஆரோக்கியமான சுக்கு காபி வீட்டிலேயே எப்படி இலகுவாக செய்து குடிக்கலாம் என தெரிந்துக்கொள்ளலாம்.
5.பால் ,பனங்கற்கண்டு ,ஏலக்காய் ,கொத்தமல்லி விதை ,சுக்கு போன்றவை தேவையான பொருட்கள்
6.முதலில் ஒரு கடாயை மிதமான தீயில் சூடாக்கவும்.
7.அதில் நல்ல வாசனை வரும் வரை கொத்தமல்லி விதை மற்றும் மிளகை வறுத்து எடுக்க வேண்டும் .
8.பிறகு மேலே கூறிய பொருளை வறுத்தெடுத்த பின் ,அனைத்து பொருட்களையும் அரைத்துக்கொள்ள வேண்டும்.
9.அடுத்து ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, அதில் அரைத்த தூளை சேர்த்து கொதிக்க வைத்து எடுக்க வேண்டும்.
10.பின் நாம் பரிமாறினால் சுவையான சுக்கு காபி தயார்! இதை குடித்து அனைவரும் ஆரோக்கியமாய் வாழலாம்