×

உட்கார்ந்த இடத்திலே வேலை பாக்குறிங்களா ?உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து 

 

ஒரு நாளைக்கு  8 மணி நேரத்துக்கும் மேலாக உட்கார்ந்த நிலையிலேயே வேலை  செய்பவர்களுக்கு , இதயநோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என  மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  

ஒரு தனியார் நிறுவன ஆய்வின்படி, நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்துக்கும் அதிகமாக உட்கார்ந்த இடத்திலேயே பணிபுரிவோருக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக கூறுகின்றனர் 
அந்த ஆய்வுபடி  ஒரு ஊழியரின் உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது, புகைபிடிப்பதை நிறுத்த வைப்பது மூலம் அவருக்கு வரவிருக்கும்  இதய நோயை விரட்ட முடியும் என்று கூறுகிறது 

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து பணியாற்றுவதால்,அந்த நபருக்கு  உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு  மற்றும் மூட்டு ,முதுகு வலி  போன்ற  உடல்நல அபாயங்களுக்கு  வழிவகுக்கும்.மேலும்  நீண்ட நேரம் மேஜையில் அமர்ந்தபடி வேலை செய்வதால் இதய செயலிழப்புக்கும்  அது வழி வகுக்கும் என்பதால் அடிக்கடி உடல் செயல்பாடு இருக்குமாறு பார்த்து கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது