சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இதை தினமும் காலையில் சாப்பிடுங்கள்.
மூட்டு வலிக்கு பல்வேறு காரணம் உள்ளது .முன்பு என்பது தொண்ணூறு வயதானவர்களுக்கு வந்த மூட்டு வலியானது இப்போது நாற்பது ஐம்பது வயதிலேயே வந்து விடுகிறது .இதற்கு மாறிவிட்ட உணவு பழக்கம் மட்டுமல்லாது ,மன அழுத்தம் ,நாளமில்லா சுரப்பிகளின் குறைந்த செயல்பாடு போன்றவை காரணம் .இந்த மூட்டு வலிக்கு இயற்கை முறையில் எப்படி தீர்வு காணலாம் என்று பார்க்கலாம்
1.இன்றைய காலத்தில் வயதினோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் ஆர்த்ரிடிஸ் என்னும் எலும்பு மூட்டு வலி.
2.இந்த வலி வந்துவிட்டால் கடுமையான வலி இருக்கும் .மேலும் மூட்டுகளில் வீக்கத்துடனும் காணப்படும்.
3.இந்த கடுமையான மூட்டு வலிக்கு வெந்தயத்தை வெறும் வயிற்றில் உட்கொண்டு வரலாம் .
4. வெந்தயத்தில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இந்த மூட்டு வலியைக் குறைக்கும்.
5.மேலும் மூட்டு வலி மட்டுமல்லாமல் செரிமான பிரச்சனைகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
5.இதனால் செரிமான கோளாறுகள், வாய்வுத் தொல்லை ,மூட்டு வலி போன்றவை நீங்குவதோடு, மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்றவைகளும் தடுக்கப்படும்.
6.மேலும் சிலர் உடல் எடையைக் குறைக்க நினைப்பர் .இப்படி நினைப்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம்,
7. இதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.
8. வெந்தயத்தில் உள்ள பாலிஃபீனோலிக் ஃப்ளேவோனாய்டுகள், சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து, சிறுநீரக நோய்கள் வராமலும் தடுக்கும்.
9.எனவே மூட்டு வலி மட்டுமல்லாமல் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடுங்கள்.
10. மேலும் உங்களுக்கு மூட்டு வலியுடன் ,கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.