×

குழந்தைக்கு காய்ச்சல் கண்டால் எப்படி குறைக்கலாம் தெரியுமா ?

 

பொதுவாக வீட்டில் உள்ள குழந்தைக்கு காய்ச்சல் கண்டு விட்டால் முதலில் வீட்டினுள் உள்ள பொருளை கொண்டு காய்ச்சலை குறைக்கும் வழிகளை கூறுகிறோம்  
காய்ச்சல் குணமாக பாட்டி வைத்திய குறிப்புகளை கீழே பார்க்கலாம்.

1.காய்ச்சல் கண்டு குழந்தை தூங்கும் போது, ஈரமான துணியை குழந்தையின் நெற்றியில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது நெற்றியில் போடலாம் . 
2.இதன் மூலம் உடனே ஜுரம் குறையும் .இது குழந்தையின் அதிக காய்ச்சலை குறைக்க உதவும் சிறந்த பாட்டி வைத்தியமாகும். 
3.மேலும் காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு அடர்த்தியான மொத்தமான உடைகளை உபயோகிக்க கூடாது. 
4.காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் லேசான காட்டன் துணிகளை பயன்படுத்த வேண்டும்.
5.காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு வெங்காயம் சிறந்த மருந்து .வெங்காயம் குழந்தையின் காய்ச்சலை குணப்படுத்தும் .. 
5.காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, குழந்தையின் காலின் பாதத்தில் தேய்த்தால் காய்ச்சல் குறையும்.
6. காய்ச்சல் உள்ள குழந்தையை வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிக்க வைக்க வேண்டும்.
7.காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சலின் போது நீரிழப்பு ஏற்படும். 
8.அதனால் காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு அதிக திரவ உணவுகளை கொடுக்க வேண்டும்.
9.மேலும் குழந்தையின் வயதை பொறுத்து தாய்ப்பால், இளநீர்,போன்ற உணவுகளை கொடுக்கலாம்