எந்தெந்த நோய்களை மல்லிகை பூவை அரைத்து பூசினால் குணமாக்கலாம் தெரியுமா ?
பொதுவாக ஒவ்வொரு பூவுக்குள்ளும் ஒவ்வொரு நோயை குணமாக்கும் ஆற்றல் உள்ளது .அந்த வகையில் மல்லிகை பூ மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.மல்லிகை பூவானது மருத்துவகுணம் நிறைந்ததாகும்.
2.உங்கள் உடல் மெலிவடைந்து ,உடலில் வெள்ளை தொட்டுகள் இருந்தால் வயிற்றில் பூச்சிகள் காணப்படும்.
3.இவற்றை போக்க 4 மல்லிகை பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வர வயிற்றில் உள்ள கொக்கி புழு,நாடாப்புழு போன்றவற்றை அழிக்கும்.
4.மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி, அவற்றை பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும்
5.வாய் புண்,வயிற்று புண் உள்ளவர்கள் மல்லிகை பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதி ஆன பிறகு வடிகட்டி காலை , மாலை இரண்டு வேளை வைத்து குடித்து வந்தால் வாய் புண்,வயிற்று புண் குணமடையும் .
6.மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், மல்லிகைப் பூவை வாங்கி தலையில் வைத்தால் மன அழுத்தமும் குறையும்,
7.நாட்பட்ட வீக்கம் , உடல் சூடு,சுளுக்கு இவற்றில் மல்லிகை பூவை அரைத்து பூசினால் வீக்கம் குறையும்.