×

வெறும் காலில் வாக்கிங் போவதால் உடல் பெறும் நன்மைகள்

 

பொதுவாக அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வெறும் காலில் நடந்து பழகியதால் ,உடலில் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்பட்டு ஆரோக்கியமாய் வாழ்ந்து வந்தனர் .ஆனால் இப்போது வீட்டுக்குள்ளேயே செருப்பு போட்டு நடப்பதால் மண்ணுக்கும் நமக்கும் ஒரு தொடர்பே இல்லாமல் போய் விட்டது .வெறும் காலில் நடப்பதால் நம் உடல் பெறும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்

1.செருப்பு போடாமல் வெறும் கால்களால் நாம் நடக்கும் போது தூக்கமின்மை நீங்கும்

2.செருப்பு இல்லாமல் வெறும் கால்களில் நடக்கும் போது மூட்டு வலி நீங்க வாய்ப்புள்ளது

3.ஷூவோ செருப்போ இல்லாமல் வெறும் கால்களில் நடக்கும் போது நமது உடலில் இரத்த அழுத்தம் குறைகிறது

4.ஷூவோ செருப்போ இல்லாமல் வெறும் கால்களில் நடக்கும் போது நம் நோய் எதிர்க்கும் சக்தி  அதிகரிக்கிறது.

5.ஷூவோ செருப்போ இல்லாமல் மண்ணில் நடக்கும் போது கணுக்கால்களும் பாதங்களும் அதிக பலம் பெறுகின்றன.

6.ஷூவோ செருப்போ இல்லாமல் வெற்றுக் கால்களில் மணலில் நடக்கும் போது, அதிக அளவு கலோரிக்கள் எரிந்து  உடல் பருமனைக் குறைக்கின்றது.

7.ஷூவோ செருப்போ இல்லாமல் மணலில் நடக்கும்போது மணல், பாதங்களில் உள்ள இறந்த சரும அணுக்களை நீக்குகிறது.

8.பாதங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாதங்களில் உள்ள சொரசொரப்பைப் போக்கவும் உதவுகிறது.

9.ஷூவோ செருப்போ இல்லாமல் நடக்கும்போது உடலில் உள்ள சுரப்புகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

10.ஷூவோ செருப்போ இல்லாமல் வெறும் கால்களில் மணலில் நடக்கும் போது இடுப்புத் தசைகள் பலம் பெறுகின்றன.