×

தக்காளிக்குள் இவ்ளோ ஆரோக்கியம் அடங்கியிருக்கா ?இது தெரியாம போச்சே ..

 

பொதுவாக சராசரியாக  மனிதன் ஒரு நாளைக்கு 300 முதல் 400 கிராம் காய்கறிகளை சாப்பிடலாம். அதில் தக்காளியை 100 கிராம் வரை சேர்த்து கொள்ளலாம். இந்த தக்காளியால் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.சிலருக்கு ஆறாத புண் இருக்கும் .இப்படி அடிக்கடி சருமம் மங்கிப்போவது, சருமத்தில் புண் வருவது, புண் வந்தும் ஆறாமல் இருப்பது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தக்காளியை அதிகமாக எடுத்து கொள்ளலாம்.
2.சிலருக்கு கண் பார்வை குறைபாடு இருக்கும் .இப்படி வைட்டமின் A குறைபாடு உள்ளவர்கள் , கண்பார்வை பிரச்சனைகள் உள்ளவர்கள் தக்காளியை எடுத்து கொள்ளலாம்.
3.சிலருக்கு இதய கோளாறு இருக்கும் .இப்படி இதய சிகிச்சையில் ஏற்கனவே இருப்பவர்கள், பைப்பாஸ் செய்தவர்களுக்கு இது நல்ல பலனை தரும்
4.மேலும் தக்காளியில் உள்ள சில பொருட்கள் பலவிதமான புற்றுநோய் ஏற்படும் அபாயங்களை குறைக்கும்    
5.சிலருக்கு இம்மியூனிட்டி பவர் குறைவாக இருக்கும் .தக்காளியில் இருக்க கூடிய வைட்டமின் C நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதால் அவர்கள் தக்காளி எடுத்துக்கலாம்  
6.சிலருக்கு பற்கள், ஈறுகள், பிரச்சினை இருக்கும் .இப்படி உள்ளவர்களுக்கும் , சரும ஆரோக்கியத்திற்கும் தக்காளி உதவுகிறது.
7.தக்காளியில்  இருக்க கூடிய ஆன்டிஆக்ஸிடண்டுகள் நமது செல்களை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது