வெள்ளரிக்காய் உண்டால் எந்தெந்த நோயை காணாமல் போக செய்யலாம் தெரியுமா ?
பொதுவாக வெயிலை சமாளிக்க பலரும் பலவிதமான வழிகளை கையாள்வது உண்டு .உதாரணமாக வெயிலை சமாளிக்க மோர் குடிக்கலாம் ,தினம் இருவேளை குளிக்கலாம் .ஆனால் வெள்ளரிக்காயும் வெயிலை எப்படி சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்
1.கோடை காலத்தில் சிலருக்கு உஷ்ணம் அதிகமாகி சில நோய்கள் உண்டாகும் .அவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடல் குளிர்சியடையும் .
2.கோடையில் சிலருக்கு பசியிருக்காது .அவர்கள் வெள்ளரிக்காய் உண்டால் பசியினை உண்டாக்கும், நாவறட்ச்சியை போக்கும்.
3.மேலும் வெள்ளரிக்காயில் பொட்டாசியம் மிகுதியாக காணப்படுகிறது .அதனால் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கி நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கும்
4.சிலருக்கு உஷ்ணத்தால் ஈரலில் நோய்கள் உண்டாகும் .வெள்ளரிக்காய் கல்லீரல், ஈரல் போன்றவற்றில் ஏற்படுகின்ற சூட்டினை தணிக்கும், ஆகவே இப்பாகங்களில் ஏற்படும் நோய்கள் குறையும்.
5.வெள்ளரிக்காய் மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தந்து நம்மை புத்திசாலியாக்குகிறது
6.சிலர் அதிக உடல் எடையால் அல்லல் படுவர் ,அவர்கள் தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள்.