சர்க்கரை பானங்கள் நமக்கு என்ன பாதிப்பை தரும் தெரியுமா ?
பொதுவாக கொழுப்பு உணவுகள் எடுத்து கொள்வதால் ,எடை குறையாமல் கூடிக்கொண்டே போகும் .இப்படி எடை கூடுவதற்கு முக்கியமான ஒரு பானமும் ஒரு காரணம் அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு என்ன செய்தாலும் உடல் எடை கூடிக்கொண்டே போகும் .உடல் எடையை அதிகரிப்பதில் சர்க்கரை முக்கியமான ஒன்றாக இருக்கிறது,
2.சிலர் சோடா போன்ற சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்களை குடிப்பது உண்டு .இந்த பானங்கள் பல நோய்களின் அபாயத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.
3.உடல் எடை குறைய முயற்சிக்கும் போது ,இதுபோன்ற சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்களை குடிக்கும்போது அதிகப்படியான கலோரிகள் நமது உடலில் சேர்ந்துவிடுகிறது.
4.இன்றைய இளம் தலைமுறையினர் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்களை பலரும் விரும்பி குடிக்கின்றனர்,
5.பலரும் கோடைகாலத்தில் இதுபோன்ற பானங்கள் மீது அதிக நாட்டம் கொள்கின்றனர்.
6.இது போன்ற சர்க்கரை பானங்கள் எடை அதிகரிப்பு மற்றும் பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது.
7.எனவே எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடும்போது இதுபோன்ற அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை தவிர்த்துவிடுவது நல்லது என்று பல சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்