மது குடிக்கும்போது நம் உடல் உறுப்புகள் எப்படி பாதிக்கிறது தெரியுமா ?
பொதுவாக மது குடிக்கும் பழக்கத்தால் இன்று பல குடும்பம் சிதைந்து சின்னா பின்னமாகின்றது .இந்த மது குடிக்கும்போது நம் உடல் உறுப்புகள் எப்படி பாதிக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் பாக்கலாம்
1.பொதுவாக நாம் மது அருந்தும் பொழுது, சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். பெரும்பாலான மதுவை சிறுகுடல் உறிஞ்சிக் கொள்ளும்.
2.அதனால் தான் உணவு உண்ட பின்னர் மது அருந்தினால் போதை சீக்கிரம் ஏறமாட்டேங்கிறது
3.சில சாராயத்தின் செறிவினைப் பொறுத்து அது எத்தனை வேகத்தில் நம் உடல் உறிஞ்சிக் கொள்கின்றது என்பது மாறுபடும்.
4.உதாரணமாக பீரை விட விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்றவைகள் அதிவேகமாக உறிஞ்சிக் கொள்ளப்படும்.
5.இப்படி உறிஞ்சப்பட்ட சாராயம் உடனடியாக நம் ரத்தத்தில் கலந்து உடலெங்கும் ஓடத் துவங்கும். அதே சமயத்தில் நம் உடலும் அதனை வெளியேற்றச் கடுமையாக போராடும் .
6.அந்த போராட்டத்தில் சிறுநீரகம் தன் பங்கிற்கு ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும்.
7. நுரையீரல் தன் பங்கிற்குச் சில அளவை மூச்சுக் காற்றில் வெளியேற்றும்.
8.அந்த மதுவை வெளியேற்றும் போராட்டத்தில்கல்லீரல் தன் பங்கிற்கு பெரும்பாலான அளவை ஆல்கஹாலை உடைத்து அசிட்டிக் அமிலமாக மாற்றும்.
9.இத்தனை பேர் சேர்ந்து அந்த ஆல்கஹாலை வெளியேற்றப் போராடிக் கொண்டிருக்கையில் நாம் அதனை விட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால் பாதிப்பு உண்டாகும்
10.அதனால் தான் அந்த உறுப்புகள் விரைவில் தம் இயல்பில் குன்றி வலுவிழந்து செயலிழந்து போகின்றன.
11.அதனால் மது குடிப்பது ஒரு வகையில் மெதுவான தற்கொலை முயற்சி மாதிரி என்று மன நல மருத்துவர்கள் கூறுகின்றனர் .