இதய நோய் அபாயத்தை இந்த கீரை குறைக்கிறது.
பொதுவாக வெங்காயத்தாள் சாலட் வெங்காயம், சுருள் வெங்காயம், பச்சை வெங்காயம் என பலவாறு அழைக்கப்படும் .இந்த வெங்காய தாள் மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் காணலாம்
1.வெங்காயத்தாள் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான கீரையாகும்.
2.வெங்காயத்தாளில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.
3.வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தக சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தக சத்து பல ஆரோக்கிய நன்மைகளை நமது உடலுக்கு வாரி வழங்குகிறது.
4.வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
5.வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
6.வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
7.மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் வெங்காயத்தாள் குறைக்கிறது.
8.வெங்காயத்தாள் இரத்தத்தில் சேர்ந்துள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.
9.வெங்காயத்தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது
10.வெங்காயத்தாள் உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.
.