ஞாபக மறதிக்கு மருந்தாக வரும் இந்த கீரை
Jun 27, 2026, 04:40 IST
வல்லாரையை எப்படி சமைத்து சாப்பிட்டால் மூளைக்கு சக்தி கிடைக்கும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வல்லாரைக்கீரை - ஒரு கப்
பூண்டு - 2 பல்
தேங்காய் துருவல் - கால் கப்
காய்ந்த மிளகாய் - 5
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
வல்லாரை கீரையை சுத்தம் செய்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து வதக்கி எடுத்த கலவையுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து எடுத்தால். சுவையான வல்லாரை துவையல் ரெடி!