×

இந்த  பழங்களை சாப்பிடுவோருக்கு இரும்பு சத்து கேரண்டி 

 

பழங்களில் தர்பூசணி ,மாம்பழம் ,உலர் திராட்சையை ,அப்ரிகாட் ,கொய்யா ,மாதுளை ,அத்தி ,பேரிட்சை போன்ற பழங்களை அதிகம் சாப்பிடுவோருக்கு இரும்பு சத்து குறைபாடு ஏற்படாது .

பேரிச்சம் பழத்தில் அதிக அளவு இரும்பு சத்து அடங்கியுள்ளது .ஒருநாளைக்கு ஒரு மனிதனுக்கு தேவையான இரும்பு சத்தில் பாதியளவு இந்த பழத்தில் கிடைக்கிறது .இதில் கால்சியம் ப்ரோட்டின்  போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது 
மாதுளை பழத்தில் 100 கிராமில் 0.3 கிராம் இரும்பு சத்து அடங்கியுள்ளது .மேலும் இதில் ப்ரோட்டின் ,கால்சியம் போன்ற அனைத்து விதமான வைட்டமின்களும் அடங்கியுள்ளது .அத்தி பழத்துக்குள் ரத்த சோகை ,சோர்வு ,மலசிக்கல் போன்ற பிரச்சினையை தீர்க்கும் .இது ஆண்களுக்கு மிகவும் பயனுள்ள பழம் .
கொய்யா பழத்துக்குள் ஒரு மனிதனின் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டு வரும் பண்புகள் நிறைந்துள்ளது .மேலும் இந்த பழத்தில் இரும்புசத்து, நார்சத்து, வைட்டமின் சி, ப்ரோடீன், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்த்ராட்சை உண்டு வந்தால் உங்களுக்கு தேவையான அளவு இரும்புசத்து கிடைப்பதோடு உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.100 கிராம் அப்ரிகாட் பழத்தில் கிட்டத்தட்ட 2.5 மில்லிகிராம் அளவுக்கு இரும்புசத்து நிறைந்துள்ளது.மாம்பழம் இதை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்தசோகை, கண் பார்வை கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் உங்களின் சரும அழகினை மேம்படுத்த உதவும்.ஒரு தர்பூசணி பழத்தில் 12 மில்லிகிராம் அளவிற்கு இரும்புசத்து நிறைந்துள்ளது.