×

இதய நோய் அபாயத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது இந்த பழத்தில் 

 

பொதுவாக பலரும் அதிகரித்து உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி கொழுப்புகள் நிறைந்த பழமான அவகோடா எடை இழப்பிற்கு உதவுகிறது.இந்த அவகோடா பழத்தில் இடம் பெற்றுள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பாக்கலாம் 
1.ஒரு அவகோடா பழத்தில் 114 கலோரிகள் இடம்பிடித்துள்ளன, அத்துடன் கிளெசமிக் குறியீடு குறைவாக கொண்டுள்ளது.
2.ஆரோக்கியம் மிகுந்த அவகோடாவில்  குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது 
3.அவகோடா பழத்தில் உள்ள கலோரிகளில் உள்ள நல்ல கொழுப்பு, ஊட்டச்சத்துகள் போன்ற காரணங்களால் அவகோடா எடை குறைப்புக்கான பழமாக இருந்து வருகிறது.
4.ஆரோக்கியமான அவகோடா பசி உணர்வை குறைக்கும் உணவாக இருக்கிறது. 
5.இதிலுள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. 6.இதனால் வேறு உணவுகளை சாப்பிடுவதை தடுக்கிறது. இதனால் எடை இழப்பிற்கு காரணமாகிறது.
7.அவகோடா பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் பசியை கட்டுப்படுத்துவதுடன், குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக இருக்கிறது. 
8.அவகோடா பழத்தில் இதய நோய் அபாயத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது .
9.சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த அவகோடா பழத்தின் க்ரீம் போன்ற தன்மை மயோனிஸ், சீஸ், வெண்ணேய் போன்றவற்றுக்கு சிறந்த மாற்றாக பயன்படுத்தலாம் 
10.அவகோடா பழம்  கலோரிக்களின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்கிறது