மலசிக்கல் ஏற்படாமல் காக்கும் இந்த பழம்
பொதுவாக வாழைபழத்தில் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இதை நாம் தினம் வாழைப்பழம் எடுத்துக்கொள்வதால் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் காணலாம்
1.தினமும் வாழைப்பழம் எடுத்துக்கொள்வதால் இதில் இருக்கும் பாஸ்பரஸ், நைட்ரஜன் சத்துக்கள் நமக்கு நன்மை செய்யும்
2.வாழைப்பழம் எடுத்துக்கொள்வதால் உடலிலுள்ள திசுக்களை மறுசீரமைப்பு செய்து இளமையாகவும், உடல் பலமாகவும் இருக்கும்படி செய்கிறது.
3.வாழைப்பழம் எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கலைப் போக்கும் சக்தி பூவன் பழத்திற்கு அதிகமாக உண்டு.
4. மலச்சிக்கல் உள்ளவர்கள் மலை வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டால் இது உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்வதோடு மலச்சிக்கல்,
5.வாழைப்பழம் எடுத்துக்கொள்வதால் பித்தம், உடல் சூடு போன்றவற்றை போக்குகிறது.
6.வாழைப்பழத்தில் அதிகமான மாவு சத்து இருப்பதால் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.
7.வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து இருப்பதால் உடலில் இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
8.வாழைப்பழம் எடுத்துக்கொள்வதால், இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் சீராக இயங்க உதவுகிறது.
9.வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மாங்கனீஸ் உப்புடன் சேர்ந்து உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.