×

தொற்று நோய்களை தடுக்கும் இந்த  உணவுகள் 

 

பொதுவாக நம் கண்களுக்கு தெரியாமல் நாம் சுவாசிக்கும் காற்றிலும் ,தண்ணீர் மற்றும் உணவுகளில் நிறைய கிருமிகள் உள்ளன .இந்த நோய் கிருமிகள் நம் மீது அண்டாமல் இருக்க நம் உடலில் நிறைய நோய் எதிர்ப்பு சக்தி தேவை .இந்த இம்முனிட்டி பவர் கொடுக்கும் உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.நம் உடல் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட  நாம் உண்ணும் உணவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உதவுகின்றன. 
2.நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உங்களுடைய உணவில் வைட்டமின் A, C, D, E, துத்தநாகம் மற்றும் செலினியம் போதுமான அளவில் இருக்க வேண்டும். இதற்கு பின்வரும் உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
3.உடல் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவும் கேரட், பூசணி, சர்க்கரை வள்ளி கிழங்கு, பப்பாளி, கிவி போன்றவற்றில் வைட்டமின் A சத்து நிறைந்துள்ளது.
4.உடல் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவும் மாம்பழம், ப்ரோக்கோலி, அன்னாசி, தக்காளி, மிளகுத்தூள், காலிபிளவர், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற உணவுகளில் வைட்டமின் C அதிகமாக உள்ளது.
5.உடல் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவும் கொழுப்பு நிறைந்த மீன், காட் லிவர் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு காளான், பால் மற்றும் தயிர் போன்ற உணவுகளில் வைட்டமின் D உள்ளது.
6.உடல் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவும் வைட்டமின் E தேவையை பூர்த்தி செய்ய பாதாம், வேர்க்கடலை, சூரிய காந்தி விதைகள், பீட்ரூட் கீரைகள் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
7.உடல் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவும் பயிறு பீன்ஸ் சணல் விதைகள், டோஃபு மற்றும் முழு தானியங்களில் துத்தநாகம் அதிகமாக உள்ளது.
8.உடல் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவும் செலினியம் தேவையை பூர்த்தி செய்ய பிரவுன் ரைஸ், பன்னீர், காளான், கீரை, முந்திரி, வாழைப்பழம், சிக்கன் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.