×

மூளை சுறுசுறுப்புக்கு எந்தெந்த உணவை தவிர்க்கணும்  தெரியுமா ?

 

பொதுவாக நாம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க மூளை சோர்வடையாமல் இருக்க வேண்டும் .இதற்கு சில பழக்க வழக்கம் முக்கியம் .இப்படி மூளை சோர்வடையாமலும் ,மூளை பாதிப்படையாமலும் இருக்க என்னென்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கும் .இந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றாக தடுக்க வேண்டும். 
2.ஏனெனில் புகைப் பிடிப்பதால் மூளைக்கு செல்லும் இரத்தம் தடை படும் வாய்ப்புள்ளது   
3. புகைப் பிடிப்பதால் இதய நோய்கள், பக்கவாதம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது 
4.அது மூளை சோர்வடையாமல் இருக்க நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருக்க கூடாது. 
5.நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருப்பதனால் உடற்பருமன் அதிகரித்தல், நீரிழிவு நோய் ஏற்படும் 
6.நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருப்பதால் மூளையின் வினைத்திறன் குறைதல்  ஏற்படுகின்றன.
7.அதனால் தொடர்ச்சியாக தனிமையில் இருக்க கூடாது. 
8.ஏனெனில் யாரும் துணைக்கு இல்லாது தனிமையில் அதிகளவு நேரத்தை செலவிடும் போது உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு என்பவற்றோடு சேர்ந்து மூளையும் சோர்வடைந்து விடுகிறது.
9.அடுத்து சிலர் அதிகளவு சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களை உண்பர் .இப்படி உண்பதால் மூளையின் செயல்பாடு மிக விரைவாக பாதிக்கப்படும். 
10.அதனால் மூளை சுறுசுறுப்புக்கு ஐஸ்கிரீம்கள், கொழுப்புக்கள், சொக்லேட்கள், இறைச்சி வகைகள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்