×

பெண்களுக்கு எந்த விதமான நோயின்றி  காக்கும் உணவுகள்.

 

பெரும்பாலான பெண்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை .இதனால் அவர்கள் பலவிதமான ஆரோக்கிய குறைவுக்கு ஆளாகின்றனர் .மேலும் அவர்களுக்கு நீரிழிவு நோய் ,ரத்த சோகை ,மற்றும் பல்விதமான் கேன்சர் நோய்க்கு ஆளாகாமல் தடுக்க ஊட்ட சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.பெண்கள் மஞ்சள் நிற கரோட்டினாய்டு சத்துக்கள் உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் இது அவர்களுக்கு கர்ப்பபை,மற்றும் மார்பக புற்று நோய் வராமல் பாதுகாக்கும் .பெண்கள் அடிக்கடி ஒமேகா -3சத்துள்ள மீன் வகைகளை சேர்த்து கொள்ள வேண்டும் .பெண்கள் தினம் சோயாபீன்ஸ், வால்நட், பூசணி விதை, கனோலா எண்ணெய், ஆளிவிதை மற்றும் அதன் எண்ணெய் போன்றவற்றை சேர்த்து கொண்டால் இதய நோய் முதல் முடக்கு வாதம் போன்ற நோய்கள் தாக்காமல் காக்கலாம் .பெண்கள் பால் உட்கொண்டால் இதில் உள்ள கால்சியம் எலும்பு பிரச்சினை வராமல் காக்கும்  .

1.மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக,ப்ரோக்கோலி,க்ரீன் டீ சாப்பிடலாம்.

2.பெண்களுக்கு தேவையான சத்துக்களில் மிக முக்கியமான ஒன்று புரோட்டின். இதற்கு . முட்டை,பீன்ஸ், நட்ஸ் வகைகளை சாப்பிடலாம்.

3. உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி சிறந்த வழிகளில் ஒன்றாகும். வாரத்தில் குறைந்தது 4 முறை 30 முதல் 40 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்யுங்கள்

 

5.ஒரு பெண் தனது 30 வயதை அடையும் போது பழம், நார்ச்சத்துள்ள உணவை சாப்பிடணும் .இதில்  இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் அதிக ஃபைபர் கொண்ட உணவுகளை சாப்பிடுவது மிக அவசியம்.