உணவிற்கு முன் சூப் அல்லது சாலட் சாப்பிட்டால்,என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக உடல் பருமனை பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் பல உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் .அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.உடல் பருமனை குறைக்க நினைப்போர் டின்னர் அதிகம் சாப்பிட்டால், எடை குறைப்பு தாமதமாகும். எனவே டின்னரை குறைத்து கொள்ளுங்கள்.
2.உடல் பருமனை குறைக்க நினைப்போர் கண்ணாடியின் முன் உட்கார்ந்து சாப்பிடலாம் .அப்படி உண்டால் நாம் வழக்கமான சாப்பிடும் அளவை விட குறைவாக சாப்பிட வாய்ப்புள்ளது.
3.உடல் பருமனை குறைக்க நினைப்போர் நம்மை பார்த்து கொண்டே நாம் சாப்பிடலாம் ., . அது நம்மை குறைவாக சாப்பிட வைக்கிறது.
4.உடல் பருமனை குறைக்க நினைப்போர் , விரும்பி உண்ணும் உணவை போட்டோ எடுத்து வைத்து கொண்டால்,அதை சாப்பிட ஆசை வரும்போது, அந்த போட்டோவை பார்த்து கொள்ளலாம்.
5.உடல் பருமனை குறைக்க நினைப்போர் சில குறிப்பிட்ட சாப்பாட்டு தட்டுகளில் சாப்பிடும் போது குறைந்த அளவு உணவு சாப்பிடலாம் .
6.உடல் பருமனை குறைக்க நினைப்போர், பஃபேவில் வெள்ளைத் தட்டில் சாப்பிடுவதை விட ,கருப்பு தட்டில் சாப்பிட்டால் குறைவான அளவு உணவு சாப்பிட்டார்களாம்.
7.உடல் பருமனை குறைக்க நினைப்போர் உணவிற்கு முன் சூப் அல்லது சாலட் சாப்பிட்டால், நாம் வழக்கமாக சாப்பிடும் டின்னரின் அளவை விட குறைவாக சாப்பிட வாய்ப்பு உள்ளது
8.உடல் பருமனை குறைக்க நினைப்போருக்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் கிடைத்தால், பசி குறைந்து, எடை குறைய வாய்ப்புகள் இருக்கிறதாம்.