×

நமது உடலில் வைட்டமின் D-ஐ உயர்த்துவதற்கு எந்த உணவு உதவும் தெரியுமா ?

 

பொதுவாக வைட்டமின் D என்பது ஒரு செறிவான நோய் எதிர்ப்புத்திறன் ஊக்கியாக இருப்பதால், குறைவான அளவில் அது இருப்பது, நிமோனியா தாக்கம் உருவாவதை ஊக்குவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.


1.பெரும் பாலானவர்களிடம் வைட்டமின் D பற்றாக்குறை காணப்படுகிறது. நோய் எதிர்ப்புத்திறனை பராமரிக்கவும் மற்றும் நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும், கரையக்கூடிய இக்கொழுப்பு வைட்டமின் இன்றியமையாததாக இருக்கிறது.

2.அழற்சி, அழற்சிக்கு எதிரான திறன் மற்றும் நோய் எதிர்ப்புத்திறனை சீராக்கும் பண்பு ஆகிய இரண்டையுமே வைட்டமின் D கொண்டிருக்கிறது. எனவே, நமது உடலில் நோய் எதிர்ப்புத்திறன்

3.தற்காப்பு அம்சங்களை தூண்டி விட்டு செயல்படுத்துவதற்கு இது மிக முக்கியமானதாகத் திகழ்கிறது. எலும்புகளையும், சதைகளையும் வலுவாக்குகிற கால்சியம் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றை நமது உடலில் ஒழுங்குமுறைபடுத்தவும் வைட்டமின் D உதவுகிறது.

4.நமது உடலில் வைட்டமின் D-ஐ உயர்த்துவதற்கு முட்டைகளும் கோழி இறைச்சியும்  பங்களிப்பை செய்கின்றன.