×

இரத்த சோகையை எந்தெந்த உணவுகள் விரட்டும் தெரியுமா ?

 

பொதுவாக  ரத்த சோகை வந்துவிட்டால் நம் உடலுக்கு முழுமையான அளவு ஆக்சிஜென் கிடைக்காது .இதன் பாதிப்பு மற்றும் குணப்படுத்தும் வழிகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் .
1.இதனால் மயக்கம் ,தலை சுற்றல் ,உடல் சோர்வு ,படபடப்பு ,மூச்சிரைத்தல் உண்டாகும் .
2.மேலும் சில கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ நேரத்தில் இதனால் உயிரிழப்பு கூட உண்டாகும் .

3.இரத்த சோகை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வரக்கூடிய நோயாகும் .
4.உடலில் சிலருக்கு அயன் சத்து கம்மியாக இருக்கும் .இந்த இரும்புச்சத்து குறைபாடு பலருக்கு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது.
5.உலர் திராட்சை இந்த பிரச்சனைக்குமுழுமையான  தீர்வு வழங்குகிறது. இதில் இரும்புச்சத்துடன் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.
6.தினம் இரவே 10-15 உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்துவிடுங்கள் , பின்னர் அதிகாலையில் தண்ணீருடன் இந்த ஊறவைத்த திராட்சையை சாப்பிடுவது நல்லது.
7.இதன் மூலம்  இரும்புச்சத்து குறைபாட்டை குறைகிறது. இதன் விளைவாக இரத்த சோகை குறைகிறது.
8.மேலும் இந்த ரத்த சோகைக்கு அத்திப்பழம், பேரீட்சை, நெல்லிக்காய், மாதுளை, ஆட்டு ஈரல், ஒமேகா மீன், முட்டை, கீரை, காய்கறிகள் உள்ளிட்டவற்றை அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்