எந்த வித மன அழுத்தமும் இல்லாமலிருக்க இந்த உணவுகள் போதும்
பொதுவாக நாம் நோயின்றி வாழத்தான் ஆசைப்படுகிறோம் .ஆனால் அதற்கான முறையான உணவுகள் எடுத்து கொள்கிறோமா என்று கேட்டால் அதுக்கான பதில் இல்லையென்றுதான் கூற வேண்டும் .நாம் துரித உணவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம் ,ஆனால் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை .எந்த உணவை உண்டால் ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.நாம் ஆரோக்கியமாக வாழ பச்சைக் காய்கறிகளை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன,
2.இந்த காய்கறி உணவின் காரணமாய் மூளையில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது மற்றும் மகிழ்ச்சியான ஹார்மோன் சுரக்கிறது. இது மனநிலையை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
3.காலிஃபிளவர் போன்ற தோற்றமளிக்கும் இந்த காய்கறி மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது,
4.அடுத்து ப்ரோக்கோலியில் ஃபோலேட் அதிகம் உள்ளது, இது மனச்சோர்வை போக்க பெரிதும் உதவுகிறது.
5.அஜ்வைன் என்பது ஒரு ஆயுர்வேத மசாலா .இது உங்கள் மனநிலையை மேம்படுத்தும் மற்றும் நீங்கள் நன்றாக தூங்க உதவும் .
6. சிலர் தினம் பால் குடிப்பர் .தினமும் பாலை உட்கொண்டு வந்தால், உடலுக்கு பல நன்மைகளைத் தருவது மட்டுமின்றி, மனதையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
7.பாதாம் மூளைக்கு நல்லது என்று சிறுவயதில் இருந்தே கேள்விப்பட்டு வருகிறோம்.
8.இந்த பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மனநலம் சிறப்பாக இருக்கும், எந்த வித மன அழுத்தமும் உங்களைத் தொந்தரவு செய்யாது.