குழந்தையின் முழு உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்
பொதுவாக ஒரு குழந்தையின் முழு உடல் வளர்ச்சிக்கு அனைத்து விட்டமின்களும் சேர்ந்த உணவு பொருட்கள் தேவை .அந்த வகையில் ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு விட்டமின் நிறைந்துள்ளது ஆக எந்த உணவுப்பொருளை கொடுத்தால் குழந்தையின் உடல் ,மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலர் சோயா பீன்ஸ் விரும்பி சாப்பிடுவர் .ஆரோக்கியமான உணவுகளில் சோயா பீன்சும் ஒன்று.
2.சில குழந்தைக்கு சிக்கன், முட்டை பிடிக்காது .அவை பிடிக்காத குழந்தைகளுக்கு இதனை பரிமாறலாம்.
3.சோயா பீன்ஸில் புரதசத்து அதிக அளவில் இருக்கிறது .அதனால் அது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
4.அத்துடன் குழந்தையின் முழு உடல் வளர்ச்சிக்கும் சோயா பீன்ஸ் பயன்படும்.
5.பொதுவாக குழந்தைகளின் உணவில் இரும்புசத்து, மெக்னீசியம், உள்ள உணவுகள் தேவை
6.அது மட்டுமல்லாமல் வைட்டமின் பி, ஏ, கே போன்றவை அதிக அளவில் உள்ள காய்கறிகளை சேர்த்து கொள்வது நல்லது.
7.முக்கியமாக கேரட், பீட்ரூட், அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்
8.மேலும் பீன்ஸ், ப்ரோக்கோலி, கீரை வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
9..பொதுவாகவே குழந்தைகளுக்கு அந்தந்த பருவ நிலைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட கொடுத்தாலே அவர்கள் ஆரோக்கியமாய் இருப்பர் .
10.மேலும், இது போன்ற பருவ நிலை பழங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டை சரி செய்யும்.