×

ஜிம்முக்கு போகாமலே ஜம்முன்னிருக்க உதவும் எளிய வழிகள் 

 

இன்றைய சூழலில் எல்லாம் எப்படி ‘டெக்’மயமாகி வீட்டிற்கே வருகிறதோ, அதேபோல் நாம் ஃபிட்டாக இருப்பதற்கும் இயன்முறை மருத்துவம் ஆன்லைன் அமர்வு மூலமாக நம் வீடு தேடி வருகின்றன. ஆம்! உடல் எடையைக் குறைப்பதும், ஏற்றுவதும் மற்றும் ஃபிட் இல்லை. ‘கூன் போட்டு இருக்காமல், கழுத்து முன் வளைந்து இல்லாமல்’ என்று பல ‘தோற்றம் சார்ந்த விதிமுறைகள்’ உள்ளது. இப்படியான தோற்றப்பாங்கு (posture) முதலியனவும் சரியாக இருந்தால்தான் ஒருவர் ஃபிட் எனலாம்.

நீண்ட தூர நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் என்பது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் பயிற்சி. நீண்ட நேரம் அமர்ந்திருக்கக் கூடிய, உடலை அதிகம் பயன்படுத்தாத வேலைகள் செய்பவருக்கு இந்த பயிற்சி உதவியாக இருக்கும். நாள் முழுவதும் நகராமல் பணி செய்யும் நபர்கள், நீண்ட தூரம் வாக்கிங் அல்லது ஜாக்கிங் செல்ல வேண்டும். இது போதிய கலோரிகளை எரிக்கின்றனவா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உடல் மூட்டு இணைப்புகள் ஆரோக்கிய நிலையில் இருக்கிறதா என்று அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

உடற் பயிற்சி செய்ய இயலாதவர்களுக்கு இவை தவிர எளிய வழிகள் மூலம் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

வெறும் பச்சை தண்ணீர் குடிப்பதற்குப் பதில் சோம்பு கலந்த தண்ணீரைப் குடித்து வந்தால் உடலில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.  பூண்டு, வெங்காயம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்பவர்களுக்கு கொழுப்பு கரைந்து விடும் 


 சுரைக்காயை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், லெமன் தேநீர் குடித்து வரலாம் 
 வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வருபவர்களுக்கு ஊளை சதை போடாமல் உடலினை கட்டுக் கோப்பாக வைத்து கொள்ளலாம் 

பப்பாளிக்காய் ,, மற்றும் மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து குடித்து வந்தாலும் ஸ்லிம்மாக இருக்கலாம் . பாலில் அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் போன்றவற்றை  காய்ச்சி குடித்து வந்தால் உடல் வெயிட் போடாமல் எப்போதும் ஜிம்முக்கு போகாமலே ஜம்முண்ணிருக்கலாம் .