நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க உதவும் நார் சத்து உணவுகள்
துரித உணவுகள் அதிகமாகிவிட்ட தற்போதைய சூழலில் நார்ச்சத்துள்ள உணவுகளின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளாததால்,இந்தியாவில் வயிறு தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெண்ணெய் பழம் என அழைக்கப்படும் அவகேடோவின் ஒரு கப்பில் 10.5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது.இதுமட்டுமல்லாமல் விட்டமின் சி,ஈ,பி6,கே ,பொட்டாசியம்,ஃபோலேட் ஆகிய ஊட்டச் சத்துக்களும் உள்ளன.வெண்டைக்காயில் அதிக நார்ச்சத்து இருப்பது மட்டுமல்லாமல்,அதிக கால்சியமும் உள்ளது.எனவே தொடர்ந்து வெண்டைக்காய் சாப்பிட்டு வர,எலும்பு தொடர்பான நோய்கள் விரைவில் குணமாகும்.மலச்சிக்கலும் குணமாகும்.
திராட்சை,ஸ்ட்ராபெர்ரி,ப்ளூபெர்ரி,பிளாக்பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களின் ஒரு கப்பில் 8 கிராம் நார்ச்சத்து உள்ளது.விட்டமின் ஏ,சி,ஈ,கே ஆகிய ஊட்டச்த்துக்களும் உள்ளன.
ஒரு கப் தேங்காயில் 7.2 கிராம் நார்ச்சத்து உள்ளது.மக்னீசியம்,ஒமேகா-6,செலினியம் போன்ற ஊட்டச்சத்துகளும் தேங்காயில் உள்ளன.
பெர்ரி :
ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குவது பெர்ரி பழங்கள் ஆகும். ப்ளாக்பெர்ரி, ப்ளு பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றில் அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளது.
அடர்த்தியான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுகள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. அந்த வகையில் இந்த பெர்ரி பழங்கள் மிகவும் ஆரோக்கியமான பழங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. நறுமணம் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் வைட்டமின் போன்ற அன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்தவையாக பெர்ரி பழங்கள் உள்ளன. பெர்ரி பழங்கள் இனிப்பு சுவையைக் கொண்டவை ஆகும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் தொட முடியாத அளவிற்கு ஒரு பழம் அல்ல. இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளும் இதனை எடுத்துக் கொள்ளலாம். பெர்ரி பழங்கள் ஒருவரை மனதளவில் கூர்மையாக வைக்கிறது. மேலும் பெர்ரி பழங்களில் உள்ள நார்ச்சத்து, வயிற்றை நிரப்பி, பசி எடுக்காத நிலையை உண்டாக்குகிறது. இந்த தன்மை, உணவு கட்டுப்பாட்டில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
அவகாடோ :
அவகாடோவில் நார்ச்சத்து , இரத்த சர்க்கரை அளவைக் கட்டுபடுத்த உதவுகிறது. அவகாடோவில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் இன்சுலின் எதிர்ப்பை மாற்றுவதில் உதவியாக உள்ளது. பிறப்பு கோளாறுகள் மற்றும் வாத அபாயங்களை அவகாடோ தடுக்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்க்கும் அன்டி ஆக்சிடென்ட் , அவகாடோவில் உள்ளது. ஹெபடிடிஸ் வைரஸ் தாக்குதலால் ஏற்படும் கல்லீரல் சேதத்தை குறைக்கிறது அவகாடோ.
ஓட்ஸ் :
ஆரோக்கியமான எடை பராமரிப்பிற்கு நார்ச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸ் உதவுகிறது. காலை உணவுகளில், பசியைப் போக்கி, வயிறு நிரம்பும் உணர்வைத் தரும் சிறந்த உணவாக ஓட்ஸ் விளங்குகிறது. ஒட்சில் உள்ள பீட்டா க்ளுகான் என்னும் பொருள், LDL கொலஸ் ட்ரால் அளவைக் குறைக்கிறது. 3 கிராம் அளவிற்கு சமமான ஓட்ஸ் தினமும் எடுத்துக் கொள்வதால், 10-20% கொலஸ் ட்ரால் உடலில் இருந்து குறைக்கப்படுகிறது. ஒரு கிண்ணம் அளவு ஓட்ஸ், 3 கிராம் அளவை சமன் செய்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் ஓட்ஸ் உதவுகிறது.
பேரிச்சை :
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மிகக் குறைந்த அளவு கொழுப்பு இருப்பதால் , கொலஸ்ட்ராலை விடுவித்து, எடை குறைப்பை ஏற்படுத்துகிறது. டயட் பற்றி அதிக கவனம் கொள்பவர்களுக்கு ஏற்ப, எடையை சம நிலையில் வைக்க உதவுகிறது. ப்ரெஷ் பேரிச்சம் பழம், மிகவும் மென்மையாக மற்றும் எளிதில் செரிமானம் ஆகும் விதத்தில் இருக்கும். நாட்பட்ட மலச்சிக்கலைப் போக்கக் கூடிய ஒரு மலமிளக்கியாக பேரிச்சை செயல்படுகிறது. தினமும் இரவில் பேரிச்சம் பழத்தை நீரில் ஊறவைத்து மறுநாள் அந்த நீருடன் அதனை உட்கொள்வதால் மலச்சிக்கல் குறைகிறது.
பயறு வகைகள் :
பயறு, பட்டாணி போன்றவை பருப்பு குடும்பத்தைச் சார்ந்தவையாகும். பயறு வகைகளில் இருக்கும் நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். பயறு உணவை சாப்பிடுவதால், இரத்தம் , உணவை உறிஞ்சும் நேரம் குறைக்கப்படுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படுகிறது. நார்ச்சத்து, வைட்டமின், மினரல், மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் பயறு வகையில் உள்ளன.