×

அடிக்கடி ஃபாஸ்ட் புட் சாப்பிடுறவங்களுக்கு , ஃபாஸ்ட்டா இந்த பார்ட்ல பிரச்சினை வருமாம்

 

துரித உணவு பொருள்களின் மணம், ருசி ஆகியவற்றுக்கு அடிமையாகிப் போனீர்கள் என்றால் அவ்வளவுதான்!  பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் வகைகள் போன்ற 'துரித உணவு' வகைகளை உணவென்றே அழைக்கக்கூடாது. ஏனெனில் உணவில் இருக்கக்கூடிய எந்த ஊட்டச் சத்தும் இவற்றில் இல்லை.. 

துரித உணவுகளில் டிரான்ஸ் மற்றும் பூரித கொழுப்பு அதிகம். நெடுநாள் இவற்றை உண்டு வந்தால் இரத்த நாளங்களில் கொலஸ்டிரால் என்னும் கொழுப்பு படிந்து இதய நோயை உருவாக்கும். வாரத்திற்கு நான்கு முறைக்கு மேல் துரித உணவுகளை சாப்பிடுவோருக்கு மாரடைப்பு வரக்கூடிய வாய்ப்பு 80 விழுக்காடு அதிகம்.. 
பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் வகைகள் போன்ற 'துரித உணவு' வகைகளை உணவென்றே அழைக்கக்கூடாது. ஏனெனில் உணவில் இருக்கக்கூடிய எந்த ஊட்டச் சத்தும் இவற்றில் இல்லை.. 

மாரடைப்பு அறிகுறிகள்

நெஞ்சு வலிதான் பொதுவான அறிகுறி. இந்த வலி அதிக வீரியத்துடனும், அழுத்தத்துடனும் இடது நெஞ்சுப் பகுதியில் இருந்து தாடை அல்லது இடது கைக்குப் பரவும். மூச்சுவிடச் சிரமமாக இருக்கும். அதிகமாகவும் வேர்க்கும். வாந்தி மற்றும் மயக்கமும் ஏற்படலாம். சிலர் இந்த அறிகுறிகளால் பயம் மற்றும் பதட்டமாக உணர்வர்.

முன்பு கூறிய ‘ஆன்ஜினா’ வலி போல் இன்றி, இந்த வலி ஓய்வு எடுத்தாலும் குறையாது. சில சமயங்களில் இந்த வலி நெஞ்சுக்குழியில் இருக்கும். மிகவும் வயதானவர்களுக்கும், பெண்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், நெஞ்சு வலியின் வீரியம் குறைவாகவும், காரணமே இல்லாமல் சோர்வாகவும், களைப்பாகவும் இருக்கும்.

மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் காலதாமதம் இன்றி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தானது.

மாரடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும் காரணிகள்:

வயது 65-க்கு மேற்பட்டோருக்கு இருபாலருக்குமே மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்.

ஆண்களுக்கு இளம் வயதிலும், பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகும் வரும் வாய்ப்பு அதிகம்.

மரபு வழியாக குடும்பத்தினர் யாருக்கேனும் மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், மற்றவருக்கும் வரும் வாய்ப்பு அதிகம்.

ரத்தத்தில் கொழுப்பின் அளவு:

கொலஸ்ட்ரால் எனப்படும் ஒரு வகையான கொழுப்பைப் பற்றிதான் நாம் அதிகமாகக் கேள்விப்பட்டு இருக்கிறோம். உடலில் உள்ள ஒவ்வொரு செல் (cell) லுக்கும் இது மிகவும் அவசியத் தேவை. இதன் அளவு அதிகரிக்கும்போதுதான் பிரச்சனையாகிறது. டிரை கிளிசிரைட் (triglyceride) எனப்படும் மற்றொரு கொழுப்பு வகை அதிகமானாலும் சிக்கல்தான்.

கேக், பிஸ்கட் வகைகள், வறுத்த பொருட்கள், டால்டா, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பாலாடை, வெண்ணெய் ஆகியவை அதிகமாக உட்கொள்ளும் போது கொழுப்பின் அளவு அதிகமாகிறது.

துரித உணவு, Fast food

மரபு வழியாகவும், உணவில் கவனம் செலுத்தாமலும் போனால், ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும். இதைத் தவிர, தைராய்ட், சிறுநீரகக் கோளாறுகள், மதுப் பழக்கம் ஆகியவை ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

இப்போதுள்ள வாழ்க்கை முறையில் இளவயதினரும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

உடல் பருமன்:

சீரான உடல் எடைக்கு ஆரோக்கியமான சம­விகித உணவு, தொடர் உடற்பயிற்ச¤ மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை அவசியம். இதயம் சீராகச் செயல்பட உடல் எடை சீராக இருத்தல் அவசியம்.

ரத்த அழுத்தம்:

அதிக ரத்த அழுத்தம் இருந்தால் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதனுடன் உணவில் உப்பின் அளவைக் குறைத்தல், சமவிகித உணவு, உடற்பயிற்சி, மது மற்றும் புகைப் பழக்கத்தை நிறுத்துதல், ரத்த அழுத்தத்தைச் சீர்செய்யும். ரத்த அழுத்தத்துடன், புகை பிடிக்கும் பழக்கமும், அதிகக் கொழுப்பும் இருந்தால் மாரடைப்பின் அபாயம் அதிகம்.

புகை பிடித்தல்:

நெஞ்சு வலி அதிகரிப்பதுடன் மாரடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது. புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.

சர்க்கரை நோய்:

சர்க்கரையின் அளவு சீராக இல்லை என்றால் இதயத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். அதிக சர்க்கரை, நாளங்களின் சுவற்றைப் பாதித்து அதிகக் கொழுப்பைப் படரச் செய்யும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, மாரடைப்பு வரும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.

உடற்பயிற்சியின்மை:

உடற்பயிற்சி,

தினமும் 30 நிமிடங்கள் வீதம் வாரத்துக்கு ஐந்து தடவையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது, ரத்தத்தின் கொழுப்பு அளவைக் குறைப்பதுடன் உடல் எடையைச் சீராக்கி, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயையும் தடுக்கும். இவை தவிர, மன அழுத்தம், மதுப் பழக்கம் போன்றவையும் மாரடைப்பு ஏற்படக் காரணமாக அமையலாம்.