×

பிரசவத்துக்கு பிறகும் ஃபிட்டாக இருக்க வேண்டுமா? : இதை செய்தால் போதும்!

பொதுவாக மகப்பேறு காலத்திற்கு பிறகு பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் பல. சில பெண்கள் குண்டாகி விடுவார்கள். சில பெண்களுக்கு தசை வளர்ச்சி அடைந்து விடும். இதன் காரணமாகவே, பல பெண்கள் குழந்தையை பற்றி யோசிக்காமலேயே இருக்கிறார்கள் என்பது தனிக்கதை. மகப்பேறுக்கு பிறகு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அளிக்க உடற்பயிற்சிகள் உறுதுணையாக இருக்கின்றன. அதன் விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்… மகப்பேறு காலத்தின் போதும் அதற்கு பிறகும் உடற்பயிற்சி மேற்கொள்வது, பெண்களுக்கு இருக்கும் மன
 

பொதுவாக மகப்பேறு காலத்திற்கு பிறகு பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் பல. சில பெண்கள் குண்டாகி விடுவார்கள். சில பெண்களுக்கு தசை வளர்ச்சி அடைந்து விடும். இதன் காரணமாகவே, பல பெண்கள் குழந்தையை பற்றி யோசிக்காமலேயே இருக்கிறார்கள் என்பது தனிக்கதை. மகப்பேறுக்கு பிறகு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அளிக்க உடற்பயிற்சிகள் உறுதுணையாக இருக்கின்றன. அதன் விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்…

மகப்பேறு காலத்தின் போதும் அதற்கு பிறகும் உடற்பயிற்சி மேற்கொள்வது, பெண்களுக்கு இருக்கும் மன சோர்வை குறைக்க உதவும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள், மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு அவர்களுக்கு ஏற்றாற்போல உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.

பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் நடைப்பயிற்சி செய்வது அவசியம். இது உடற்பயிற்சியின் எளிய வழி. பின்னோக்கி நடப்பது, ஷிக் ஷாக் நடைபயிற்சி போன்றவற்றை மகேப்பேறு காலத்தின் போது பெண்கள் மேற்கொள்ளலாம். அடுத்த எளிதான உடற்பயிற்சி ஆழமான சுவாசம் மேற்கொள்வது. தசைகளை தளர்த்த, வயிற்று சுருக்கத்துடன் நிதானமாக ஆழ்ந்த சுவாசத்தை மேற்கொள்ள வேண்டும். வயிற்றை இறுக்கமாக வைத்துக் கொண்டு மேல்நோக்கியும் உள்நோக்கியும் சுவாசிக்க வேண்டும்.

தலை, தோள்பட்டை உயர்த்தும் உடற்பயிற்சி:

முதுகை தரையில் வைத்துக் கொண்டு கைகளை பக்க வாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். கால்களை கீழே வைத்துக் கொண்டு முழங்கால்களை வளைத்து, தலையை மெல்லமாக தூக்க வேண்டும். இந்த உடற்பயிற்சியின் போது மெல்ல காற்றை சுவாசிக்க வேண்டும்.

தலையை உயர்த்தும் உடற்பயிற்சியை போலவே தோள்பட்டை உயர்த்துதலையும் செய்ய வேண்டும். சுவாசிக்கும் போது தோள்பட்டையை உயர்த்தி முழங்கால்களை நோக்கி நகர வேண்டும். இது மிகவும் எளிதான உடற்பயிற்சி. தோள்பட்டையை உயர்த்தும் போது, கைகளை தலையின் பின்னால் வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அடுத்த உடற்பயிற்சி ​முழங்கால் இடுப்பு சாய்வு. பிரசவத்திற்கு பின் வயிற்றை பழைய நிலைக்கு கொண்டு வர முக்கியமான உடற்பயிற்சி இது. தரையில் நேராக படுத்துக் கொள்ளுங்கள். பின்னர், கால்களை உடலுக்கு கீழ் மடித்து கைகளால் கால்களை பிடித்துக் கொள்ளுங்கள். தலையை மேலே நோக்கியவாறு உடலை வளைத்து சுவாசியுங்கள்.

அடுத்தது ​கீகெல் உடற்பயிற்சி. சிறுநீர் தசைகளை தளர்த்த உதவும் முக்கியமான ஒன்று. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னையை சரி செய்ய உதவும். தரையில் நேராக படுத்துக் கொள்ளுங்கள். கைகளை உடலுக்கு பக்கவாட்டில் கொண்டு வந்து நேராக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், காலை மேல்நோக்கி மடக்கி இடுப்பு பகுதியை மெல்ல உயர்த்துங்கள். வளையக் கூடாது. மேற்கண்ட உடற்பயிற்சிகளை மருத்துவர்களின் ஆலோசனையுடன் மகப்பேறு காலத்திலும், மகப்பேறுக்கு பிறகும் ஃபிட்டாக இருக்க முடியும்..