×

சர்க்கரை பானங்களை அதிகம் குடிப்பவர்களுக்கு மூளை என்னாகும் தெரியுமா ?

 

பொதுவாக அதிகப்படியான சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதுவும் வெள்ளை சர்க்கரையில் நம் உடலுக்கு நிறைய தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் உள்ளது .இந்த பதிவில் அதிகம் இனிப்பு சேர்த்த பொருளால் நமக்கு என்ன பாதிப்பு வரும் என்று பார்க்கலாம் 

1.சிலர் உணவில் அதிகப்படியான சர்க்கரை சேர்த்து கொள்வர் .இப்படி சேர்ப்பதனால் அறிவாற்றல் மற்றும் மூளை குறைபாடுகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 
2.சிலர் அதிகம் சுவீட் சாப்பிடுவதுண்டு .இப்படி அதிக இனிப்பு பானங்களை உட்கொள்பவர்களுக்கு நினைவாற்றல் குறைவு ஏற்பட்டு  ஒட்டுமொத்த மூளையின் அளவு குறைகிறது.
3.சிலர் அதிக சுவீட் பானம் குடிப்பதுண்டு .நீங்கள் வயதாகும்போது உங்கள் மூளையை கூர்மையாக வைத்திருக்க விரும்பினால், அதிக ஸ்வீட் பானங்களைத் தவிர்க்கவும். 
4.அது மட்டுமல்லாமல் சோடா, இனிப்பு தேநீர் மற்றும் பிற சர்க்கரை பானங்களை அதிகம் குடிப்பவர்களுக்கு நினைவாற்றல் குறைபாடு ஏற்படும் .
5.சிலர் அதிகம் வறுத்த உணவு சாப்பிடுவதுண்டு .இந்த வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக சேர்க்கும் செயற்கை பொருட்கள், மூளையை பாதிக்கிறது 
6.மேலும் இதில் உள்ள ரசாயனம், உணவுக்கு நிறமேற்றும்  சாயப்பொருட்கள்  மூளையில் உள்ள நரம்பு செல்களை மெதுவாக பாதித்து அழிக்கிறது. 
7.வறுப்பதற்காக பயன்படுத்தப்படும் சில எண்ணெய் வகைகள் அதிகம் நச்சுத்தன்மை வாய்ந்தவை. 
8.வறுத்த கோழி மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் உங்கள் மூளைக்கும் நிச்சயம் தீங்கு விளைவிக்கும். 
9.சிலர் அதிகம் பொரித்த உணவை சேர்ப்பர் .இந்த பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நினைவகம் மற்றும் மூளை செயல்பாடு போன்றவை பாதிக்க வாய்ப்புள்ளது.